-
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
மு.வ உரை :
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
கலைஞர் உரை :
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
சாலமன் பாப்பையா உரை :
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?
இதுபோன்ற குறள்களை கற்க வேண்டுமா! இந்த லிங்கை கிளிக் செய்து திருக்குறள் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்:- https://play.google.com/store/apps/details?id=nithra.thirukkural
Comments