திருக்குறள் குறள் : 869


செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

மு.வ உரை :

அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால்  அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

கலைஞர் உரை :

அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்

சாலமன் பாப்பையா உரை :

நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.

இதுபோன்ற குறள்களை கற்க வேண்டுமா! இந்த லிங்கை கிளிக் செய்து திருக்குறள் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்:- https://play.google.com/store/apps/details?id=nithra.thirukkural

Comments