நினைத்தாலே இனிக்கும்! - 1 தொடர்கிறது

நினைத்தாலே இனிக்கும்! - 1 தொடர்கிறது
ஒருவருக்கு வியாதி வந்து விட்டது.
இனிப்பான மருந்தைக் கொடுத்து குடி என்கிறார்கள். அந்த இனிப்புக்கு ஆசைப்பட்டே, அந்த மனிதர், இந்த நோய் இன்னும் பத்துநாள் இருக்கக்கூடாதா என்று நினைக்க ஆரம்பித்து விடுவார். அதே நேரம் கசப்பு மருந்து கொடுத்தால், ஒரே நாளில் இந்த வியாதி ஓடிவிடாதா என கதறுவார். வியாதி என்பது நமது பாவங்கள். அவற்றை விரட்ட, இனிப்பு மருந்தாக பல வித பக்திமுறைகள் உள்ளன. அதைக்கொண்டு பகவானை அடைய பல பிறவிகளைக் கடக்க வேண்டிஇருக்கும். அதேநேரம் கசப்பு மருந்து என்றால் பிறவி வியாதி சீக்கிரம் பறந்து விடும். அந்த கசப்பு மருந்து தான் பகவானை நினைப்பது.
அதேநேரம், பகவானை நினைப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா? அவனை எப்படி நினைப்பது. அவனுக்கு பல வடிவங்கள் இருக்கின்றதே! எந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து வணங்குவது!
பகவான் சூஷ்மரூபமாக இருக்கிறான் என்கிறார்கள். அதே நேரம் தன்னை புருஷோத்தமன்.. அதாவது எல்லாரையும் விட மிகவும் உயர்ந்தவன் என நினைக்க வேண்டும் என்கிறான். ஒருவனைப் பற்றி விசாரிக்கும் போது, இவன் பாட்டு, படிப்பு எதில் உயர்ந்தவன் என்று கேட்கிறோம் இல்லையா! அதுபோல், பகவான் எந்த வகையில் உயர்ந்தவன் என்று தெரிந்து கொண்டாக வேண்டும்.
இங்கு தான் கீதையின் 15வது அத்தியாயம் முக்கிய இடம் பெறுகிறது. கீதையைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. பெரிய பெரிய மேதைகள் கூட, இன்று வரை கீதையை ஓரளவு தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதில் 15வது அத்தியாயத்தைப் படித்தாலே போதும். அவனுக்கு பிறவியில்லை என்றாகி விடும். தொடரும்

Comments