பார்வையற்ற ஒருவன் இருளிள் போவதை கண்டு

#தன்னிலை அறிதல்!

பார்வையற்ற ஒருவன் இருளிள் போவதை கண்டு இன்னொருவன் விளக்கொன்றை கொடுத்தான். "எனக்கு எப்போதுமே இருள்தானே.!" என்றான் பார்வையற்றவன். "உனக்காக அல்ல.. எதிரே வருபவர்கள் உன்னை விலத்தி போவதற்காகவே..!" என்றான் அவன். இவனும் சம்மதித்து அந்த விளக்கை வாங்கி கொண்டு போனான். சிறிது தூரம் சென்றதும் எதிரே ஒருவன் வந்து வேகமாக மோதிக்கொண்டான். பார்வையற்றவன் கேட்டான்.
"விளக்கின் வெளிச்சம் இருந்தும் உனக்கு நான் வந்தது தெரியவில்லையா..?" என்று.
அதற்கு அவன்.. "உன் விளக்கு எப்பவோ அனைந்து விட்டது..!" என்று சிரித்தான். அடுத்தவன் அறிவு ஒருபோது எனக்கு உதவாது என்பதை புரிந்து. விளக்கை வீசிவிட்டு.. குச்சியை எடுத்து கொண்டு பாடிக்கொண்டே போனான் பார்வையற்றவன்..!

Comments