தினம் ஒரு ஸ்லோகம்!! இராமாநுச நூற்றந்தாதி

தினம் ஒரு ஸ்லோகம்!! இராமாநுச நூற்றந்தாதி 3
பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப்* பேய்ப்பிறவி
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப் * பொருவரும் சீர்
ஆரியன செம்மை இராமானுச முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் * அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.
விளக்கவுரை - இந்த உலகில் உள்ள மனிதர்களாக இருந்தாலும் ஒரு சிலர் - அசுர வம்ஸத்தில் பிறவி எடுத்து அறிவற்றுப் போனவர்களுடன் தொடர்பு கொண்டும், அஹங்காரம் போன்றவை நிரம்பியும் உள்ளனர். அவர்களது தொடர்பை, எனது நெஞ்சமே! நீ நீக்கிக் கொண்டாய். மேலும் நீ (நெஞ்சத்தை நீ என்றார்) செய்த உபகாரம் எனன? "இதுதான் இவரது குணம்" என்று எல்லைப் படுத்திச் சொல்ல இயலஈத அளவிற்குத் திருக்கல்யாண் குணங்கள் கொண்டவரும்; அனைத்துச் சாஸ்த்ரங்களையும் அறிந்தவரும்; இந்த உலகினருக்கு மட்டும் அல்லாது திருவேங்கடமுடை -யானுக்கே சங்கு-சக்கரம் அளித்ததால் அவனுக்கும் ஆசார்யனாக உள்ளவரும்; தன்னை அண்டியவர்களின குற்றத்தைப் பார்த்து அவர்களைக் கைவிடாமல், அவர்கள் நிலைக்குத் தான் இறங்கி வந்து அருளும் தன்மை கொண்டவரும் ஆகிய எம்பெருமானாரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் வைக்கும் உயர்ந்த பேறு பெற்றவர்கள் பலர் உண்டு. அவர்களது திருவடிகளின் கீழ் என்னை நீ (நெஞ்சம்) சேர்த்து வைத்தாய். எனது நெஞ்சமே! இத்தகைய உயர்ந்த ஸ்வபாவம் உள்ள உன்னை நான் வணங்குவதே உனக்கு நான் செய்யும் கைம்மாறாகும்.

Comments