தினம் ஒரு திவ்ய ப்ரபந்தம்

தினம் ஒரு திவ்ய ப்ரபந்தம் தொடர்கிறது
தினம் ஒரு திவ்ய பிரபந்தம் 1
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

பாண்டியராஜனுடைய பண்டித ஸபையிலேவந்து பரதத்வநிர்ணயம் பண்ணின பெரியாழ்வார்க்கு அவ்வரசன் யானையின்மேலே மஹோத்ஸவம் செய்வித்தபோது அந்த உத்ஸவத்தைக்கண்டு ஆநந்திப்பதற்காக ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார் ஸேவித்து வந்த அருமருந்தன்ன எம்பெருமானுக்கு எழும்பூண்டெல்லாம் அஸுரக்ஷ ஸமயமாயிருக்கிற இந்நிலத்திலே யாராலே என்ன தீங்கு விளைகிறதோ என்று அதிசங்கைப்பட்டு ‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு பாடுகிறார்.

அதாவது - ஜய விஜயீபவ என்கிறார். தொடரும்

Comments