வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்
Pandit Anand Bharathi.
எண்ணங்களே - எண்கள்.
எண்களே - கண்கள்.

அக்னி மூலை – தென் கிழக்கு

அக்னிமூலையில்தான் அடுப்பு இருக்க வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அந்த காலத்தில் விறகு அடுப்புதான் பயன்படுத்தினார்கள். அச்சமயத்தில் வெப்பம் வீட்டிற்குள் அதிகம் வராமல் இருக்கவும், தீ அணையாமல் நன்றாக எரியவும் காற்றின் திசைகேற்ப தென்கிழக்கில் சமையறை அமைத்தார்கள். நவீன யுகத்தில் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் காலத்திலும் அதையே சொல்லி காசு பறிக்கும் கும்பலை என்ன செய்யலாம்.

ஈசான்ய மூலை – வட கிழக்கு

மனையில் ஈசான்யமூலைதான் சுத்தமாகவும், தண்ணீர் தொட்டி போன்றவைகளும் இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மழை நீர் வடிவதற்கு வாகாகவும், தண்ணீர் வழிந்தோட ஏதுவாகவும் இந்த மூலையானது மற்ற மூலைகளை விட பள்ளமாக இருக்க வேண்டும் என வரையறுக்க பட்ட்து. தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக மீன் தொட்டிகளையெல்லாம் விற்பனை செய்து வருகிறார்கள்

கன்னிமூலை – தென்மேற்கு

தென்மேற்கு மூலைதான் மேடாக இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த மூலை மேடாக இருந்தால்தான் இதற்கு நேரேதிர் மூலையான ஈசான்யத்திற்கு தண்ணீர் வழிந்தோட வசதியாக இருக்கும். இதையே சொல்லி ஓவர் ஹெட் டேங்க் கூட கன்னிமூலையில்தான் இருக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

வாயு மூலை – வடமேற்கு

வாயு மூலையில்தான் கழிவு நீர் தொட்டிகள் அமைய வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதுவும் ஈசான்ய மூலைக்கு சொன்ன மாதிரிதான் நீர் வழிந்தோட ஏற்ற வகையில் ஈசான்ய மூலையில் தண்ணீர் தொட்டியும் வாயு மூலையில் கழிவு நீர் தொட்டியும் அமைய வேண்டும் என அறிவுறுத்துகிறது. தற்போதைய பைப்பிங் சிஸ்டம் மூலம் நமக்கு வேண்டிய இடங்களில் வாட்டம் கொடுத்து விடலாம் என்பதால் இதுவும் இங்கு தேவையில்லாமல் போகிறது.

Comments