ஸ்ரீமதே ராமானுஜாய நம

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவெள்ளறை
ஸ்ரீ புண்டரீகாஷன் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ ஷெண்பகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ புண்டரீகாஷ பரப்ரஹ்மணே நம:
1. திருவெள்ளறை திவ்யதேசத்தில் தாயாரின் திருநாமம் என்ன?
ஷெண்பகவல்லி தாயார், பங்கயச்செல்வி தாயார்
2. திருவெள்ளறை திவ்யதேசத்தில் பெருமாளின் திருநாமம் என்ன?
புண்டரீகாஷன் பெருமாள், செந்தாமரைக் கண்ணன் பெருமாள், பங்கயச்செல்வன் பெருமாள்
3. திருவெள்ளறை திவ்யதேசத்தில் பெருமாள் எந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார்?
நின்ற திருக்கோலம்
4. திருவெள்ளறை திவ்யதேசத்தில் பெருமாள் எந்த திசையில் சேவை சாதிக்கிறார்?
கிழக்கே திருமுகமண்டலம் (East)
5. திருவெள்ளறை திவ்யதேசத்தின் புஷ்கரணி/தீர்த்தம் பெயர்?
திவ்யகந்த தீர்த்தம், கஷீர தீர்த்தம், குச தீர்த்தம், சக்கர தீர்த்தம், புஷ்கல தீர்த்தம், பத்ம தீர்த்தம், வராக 
தீர்த்தம், மணிகர்ணிகா தீர்த்தம்
6. திருவெள்ளறை திவ்யதேசத்தின் விமானத்தின் பெயர்?
விமலாக்ருதி விமானம்
7. திருவெள்ளறை திவ்யதேசத்தில் பெருமாள் யாருக்கு பிரத்யக்ஷமாக காட்சி அளித்தார்?
கருடன் (பெரிய திருவடி), சிபி, பூதேவி, மார்கண்டேயன், லக்ஷ்மீ, ப்ருஹ்மருத்ராதிகள்
8. திருவெள்ளறை திவ்யதேசத்திற்காக எத்தனை ஆழ்வார்கள் மங்களாசாசனம் அருளி செய்தனர்?
2 ஆழ்வார்கள்
9. திருவெள்ளறை திவ்யதேசம், ஆழ்வார்களால் மொத்தம் எத்தனை பாசுரங்கள் அருளப் பெற்றன? விவரம்  கூறுக:
24 பாசுரங்கள் - பெரியாழ்வார் 11 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள்  
10. திருவெள்ளறை திவ்யதேசத்தில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் விவரங்களை கூறுக:
1. பெரியாழ்வார் 11 பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி (1-5)71 – 1 பாசுரம்
இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி (2-8)192-201 – 10 பாசுரங்கள்      
2. திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி (5-3)1368-1377 -10 பாசுரங்கள்
பத்தாம் பத்து - முதலாம் திருமொழி (10-1)1851 – 1 பாசுரம்
சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) – 2673 (70) -1 பாசுரம்      
பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) – 2674 (117) - 1 பாசுரம்

Comments