காலை செய்தி 13-5-2016

♈🇮🇳காலை செய்தி🇮🇳♈🙏🌴🌴13-5-2016🌴🌴🙏📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நுண் பார்வையாளர்களாக மத்திய அரசு அலுவலர்கள் 199 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.நுண் பார்வையாளர்கள்

♈🇮🇳🌴மராட்டியம் வறட்சிக்கு விடை கொடுக்க போகிறது: இந்த ஆண்டு வழக்கத்தை விட 27 சதவீதம் கூடுதல் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

♈🇮🇳🌴மராட்டியத்தில் 34 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்

♈🇮🇳🌴சோதனை அடிப்படையில் தேவ்னார் போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு 8 மணி நேர பணி போலீஸ் கமிஷனர் உத்தரவு

♈🇮🇳🌴மும்பை, 

தன்னிடம் நகைப்பறிக்க முயன்ற போலி போலீசை பொதுமக்கள் உதவியுடன் 81 வயது மூதாட்டி ஒருவர் போலீசில் பிடித்து கொடுத்தார்.81 வயது மூதாட்டி

♈🇮🇳🌴கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சேக்கு ஜாமீன்

♈🇮🇳🌴அமெரிக்காவில் நுழைய ‘முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது, தற்காலிகமானது’ டிரம்ப் நிலையில் ‘திடீர்’ மாற்றம்

♈🇮🇳🌴அமெரிக்காவில் துப்பாக்கியை வைத்து விளையாட்டு: குண்டு பாய்ந்து 5 வயது சிறுமி பலி

♈🇮🇳🌴முல்லைப்பெரியாறு அணை பயன்பாட்டை நிறுத்த வேண்டும்’ சுப்ரீம் கோர்ட்டில் கேரள வக்கீல் வழக்கு

♈🇮🇳🌴மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் பாராளுமன்றம் அருகே தூக்குப்போட்டு தற்கொலை

♈🇮🇳🌴பீகார் மாநிலத்தில் 12 அடியாட்கள் கைது: ஆயுதங்கள் பறிமுதல் 

♈🇮🇳🌴 துணை ராணுவத்தினர் 700 பேர் வருகை  

♈🇮🇳🌴மதுரையி்ல் வருமானவரித்துறையினர் சோதனை 

♈🇮🇳🌴 ஐ.பி.எல்.கிரிக்கெட்: டில்லி வெற்றி  

♈🇮🇳🌴தர்மபுரி: அமைச்சர் பழனியப்பன் கார் மீது கல்வீசி தாக்குதல்  

♈🇮🇳🌴பிரதமரின் டிகிரி பட்டம் உண்மையானது: டில்லி பல்கலை., விளக்க்ம் 

♈🇮🇳 ரகுநாயக் குடும்பத்திற்கு ரூ 5லட்சம் நிதியுதவி:  

♈🇮🇳🌴ஈரோடு:வருமான வரித்துறை ரெய்டில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ 1 கோடி பறிமுதல்  

♈🇮🇳🌴சென்னை எழும்பூரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை 

♈🇮🇳🌴 மாஜி இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரிடம் சி.பி.ஐ. விசாரணை  

♈🇮🇳🌴தமிழக மக்களை ஏழைகளாக வைத்திருக்க திராவிட கட்சிகள் முடிவு ::ராஜ்நாத்சிங்

♈🇮🇳🌴கிஷ்கிந்தா பொழுது போக்கு பூங்கா உரிமையாளர் கைது  

♈🇮🇳🌴தி.மு.க., காங்., ஊழல் கட்சிகள்: ராஜ்நாத் விளாசல்  

♈🇮🇳🌴புதுச்சேரியில் வாஷிங் மெஷின் இலவசம்: என் ஆர் காங்., தேர்தல் அறிக்கை  

♈🇮🇳🌴தூத்துக்குடி அதி.மு.க., காரியாலயத்தில் அதிகாரிகள் சோதனை  

♈🇮🇳🌴பணப்பட்டுவாடா: தி.மு.க., மீது அ.தி.மு.க., புகார்  

♈🇮🇳🌴வெற்றிக்கு பாதிப்பில்லை: கருணாநிதி உறுதி  

♈🇮🇳🌴தமிழகத்திற்காக நான் பாடுபடுகிறேன் : ஜெ., பிரசாரம் 

♈🇮🇳🌴 கடலூரில்  கடை உரிமையாளர் வீட்டில் சோதனை

♈🇮🇳🌴லண்டனில் உள்ள விஜய் மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது சிபிஐ

♈🇮🇳🌴 14ம் தேதி மாலை முதல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை : தேர்தல் அதிகாரி உத்தரவு 

♈🇮🇳🌴இலங்கை அதிபர் சிறிசேன நாளை இந்தியா வருகை 

♈🇮🇳🌴புதுச்சேரியில் மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை : ரங்கசாமி 

♈🇮🇳🌴புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு 

♈🇮🇳🌴சிம்லாவில் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் மாயம் 

♈🇮🇳🌴நன்னிலம் தொகுதி அதிமுக அமைச்சர் காமராஜூக்கு எதிர்ப்பு 

♈🇮🇳🌴10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் ரூ.6,50,000 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், 33 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள், 256 மாவட்டங்கள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இரண்டு வருடங்களாக நிலவி வரும் மோசமான வானிலை காரணமாகவும், அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினாலும், நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான அளவுக்கு சென்றுள்ளது, வறட்சி பாதித்த பகுதிகளில் மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. வறட்சியின் பாதிப்பு அடுத்த 6 மாதத்திற்கு நீடிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

வறட்சி பாதித்த பகுதிகளில் தண்ணீர், உணவு, சுகாதாரம் ஆகியவற்றிற்காக, ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு, ஒரு நபருக்கு அரசு ரூ.3 ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. 33 கோடி மக்கள் வசிக்கும் இந்த பகுதிகளில் அரசுக்கு மாதத்திற்கு ரூ.1,00,000 கோடி செலவாகும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மின்சாரம், உரம் மற்றும் சில பொருட்களின் மீதான மானியத்தால் ஏற்படும் இழப்பு காரணமாக வறட்சியின் பாதிப்பு இன்னும் அதிகமாகும். பொருளாதாரத்தை பொறுத்த வரையில் நிதி, வளர்ச்சியிலிருந்து உதவிக்காக மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மக்கள இடம்பெயர்தல் ஆகியவை காரணமாக நகர்ப்பற உள்கட்டமைப்பில் பிரச்னை ஏற்படும். இது பெண்கள், குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கும். கடன் சுமை அதிகரிக்கும் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

♈🇮🇳🌴தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தில் இலவசம் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடப்படுவதாகவும் , இதற்கென செலவழிக்கப்பட்ட ரூ. 11 ஆயிரத்து 500 கோடியில் 25 ஆயிரம் பள்ளிகள் திறந்திருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திருவாடானையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசுகையில் குறிப்பிட்டார்.

♈🇮🇳🌴பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்:உம்மண் சாண்டி வலியுறுத்தல்

♈🇮🇳🌴லத்தூருக்கு 6.2 கோடி லிட்டர் குடிநீர் வழங்கியதற்காக 4 கோடி ரூபாய் கேட்டு பில் அனுப்பியது ரயில்வே நிர்வாகம்

♈🇮🇳🌴உலகின் அதிக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லியை பின்னுக்கு தள்ளியது ஈரானின் சாபோல்

♈🇮🇳🌴பிரதமர் மோடியின் பட்ட படிப்பு விவகாரத்தில் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை: டெல்லி பல்கலைக்கழகம்

♈🇮🇳🌴பிரான்சில் தற்கொலைக்கு முன் செல்பி எடுத்து வீடியோவாக வெளியிட்ட இளம்பெண்

♈🇮🇳🌴அமெரிக்காவைச் சேர்ந்தவர் வெண்டி இடா (வயது 64) 2012 ஆம் ஆண்டு உலகின் வயதான உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார்.

தினமும் 2 ம்ணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடும் வெண்டி  இளம் மங்கையை போல் காட்சி அளிக்கிறார். அவரை பார்த்தால் 30 வயதிற்கு மேல் மதிப்பிட முடியாது. வெண்டிக்கு 43 வயதில்  ஸ்கை என்ற மகளும் 40 வயதில் மகனும் உள்ளனர்.3 பேரக்குழந்தைகள் உள்ளனர்

♈🇮🇳🌴ஜாமாத் தலைவர் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதன் எதிரொலி: வங்காளதேசத்தில் பலத்த பாதுகாப்பு

♈🇮🇳🌴வங்காளதேசத்தில் 4 தீவிரவாதிகள் கைது போலீஸ் தகவல்

♈🇮🇳🌴மாநிலங்களவைக்கான உறுப்பினர் தேர்தல் ஜூன் 11 தேதி நடைபெறுகிறது
♈🇮🇳🇮🇳♈

Comments