மாலை செய்தி 14-5-2016

♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈🙏🌴🌴14-5-2016🌴🌴🙏📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை: அருண் ஜெட்லி கண்டனம்...பீகார்

♈🇮🇳🌴மொபைல்போனை விழுங்கிய வாலிபர் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கபட்டது..அமெரிக்க

♈🇮🇳🌴சாதனைச் சரித்திரம் தொடர்ந்திட, அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் வாக்காளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

♈🇮🇳🌴தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்ட வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

♈🇮🇳🌴திருப்பூரில் கைபற்றப்பட்ட பணம் வங்கி பரிமாற்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதே - ராஜேஷ் லக்கானி

♈🇮🇳🌴 ♈🇮🇳🌴ஊட்டிக்கு சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்த 17 பேர் காயம்  

♈🇮🇳🌴அரூரில் இரும்பி கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் சோதனை 

♈🇮🇳🌴 தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதா மக்களை மறந்துவிடுவார்: மு.க.ஸ்டாலின் 

♈🇮🇳🌴 திருச்சியில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு 

♈🇮🇳🌴தேர்தல் அன்று திரையரங்குகளில் 2 காட்சிகள் ரத்து 

♈🇮🇳🌴 திருவள்ளூரில் ஹெல்மேட் கொள்ளையர்கள் கைது 

♈🇮🇳🌴 பணமோ, பரிசு பொருட்களையோ பெற்று வாக்களிக்க வேண்டாம் : சகாயம் வேண்டுகோள் 

♈🇮🇳🌴 வங்கக்கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை : 15, 16ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு 

♈🇮🇳🌴 உண்மையான ஜனநாயக ஆட்சி உதயமாக திமுகவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் : கருணாநிதி 

♈🇮🇳🌴மாஜி திமுக அமைச்சர் பிரச்சாரத்தில் மோதல் : அதிமுக எம்.பி. மண்டை உடைப்பு 

♈🇮🇳🌴 மானாமதுரையில் பணபட்டுவாடாவில் தகராறு - மண்டை உடைப்பு

♈🇮🇳🌴கச்சத்தீவில் புதிய தேவாலயம் அமைக்க இலங்கை அரசு முயற்சியா? : கலைஞர் கண்டனம் 

♈🇮🇳🌴 ராட்டினம் உடைந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் பல
♈🇮🇳🌴ஓட்டுக்கு பணம் தரும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்!: அன்புமணி 

♈🇮🇳🌴அதிமுக, திமுக பணத்தை மட்டுமே நம்பும்: ஜி.ராமகிருஷ்ணன் புகார் |

♈🇮🇳🌴சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் 

♈🇮🇳🌴கருத்து கணிப்புகளை நிராகரிக்க வேண்டும் :பி.எஸ்.ஞானதேசிகன் 

♈🇮🇳🌴காஞ்சியில் அதிமுக பிரமுகர் கடையில் ரூ.4 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴காந்திசிலை முன்பு பா.ம.க. வேட்பாளர்கள் உறுதி மொழி ஏற்பு

♈🇮🇳🌴கச்சத் தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் இலங்கை அரசின் திட்டத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும்: வைகோ

♈🇮🇳🌴தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: சூர்யா

♈🇮🇳🌴அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! பணத்துக்கு சோரம் போய்விடாதீர்கள் : சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துர

♈🇮🇳🌴’’இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’ : ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அழகிரி

♈🇮🇳🌴தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நுழைவுத் தேர்வுப் பிரச்சினையிலும் குழப்பமா?: கலைஞர்
.

♈🇮🇳🌴தஞ்சாவூரில் பறிமுதல் செய்யப்பட்டவை மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஆட்சியர் சுப்பையன் விளக்கம்

♈🇮🇳🌴தஞ்சாவூரில் 500 போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்!
♈🇮🇳🌴சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி கூடுதல் இடங்களை பிடிக்கும் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு இயக்கம் கருத்து கணிப்பு முடிவு வெளியீடு

♈🇮🇳🌴தமிழினியின் 'ஒரு கூர் வாளின் நிழலில்' சிங்கள மொழியில் வெளியானது

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் அணித் தலைவியாக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதியதாகக் கூறப்படும் 'ஒரு கூர் வாளின் நிழலில்' என்ற நூலின் சிங்கள மொழியாக்கம் கொழும்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

♈🇮🇳🌴வானத்தில் இருக்கும் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் நிலைமைகளைச் சார்ந்து தனது நகர்வுகளை தீர்மானிக்கும் சாண வண்டுகள் ஒரு சிக்கலான நகர்வுப்பாதை முறையினை பின்பற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

♈🇮🇳🌴இலங்கையின் கிழக்கே, அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமொன்றில் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் அடையாளந் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

♈🇮🇳🌴லிபியாவிலிருந்து 29 இந்திய செவிலியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு தமது அரசாங்கமே நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கூறியிருந்தார்.

ஆனால், தங்களின் சொந்த முயற்சியாலும் தமது லிபிய நண்பர் ஒருவரின் உதவியாலுமே தாம் நாடு திரும்ப முடிந்துள்ளதாக அந்த செவிலியர்கள்  கூறியுள்ளனர்.

♈🇮🇳🌴சீனாவில் மொபைல் செயலியை மையப்படுத்திய இயங்கும் முன்னணி டாக்ஸி நிறுவனமான டிடி சுக்ஸிங் நிறுவனத்தில் தாம் ஒரு பில்லியன் டாலரை முதலிட்டுள்ளதாக தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தெரிவித்துள்ளது.

♈🇮🇳🌴சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

வலைப்பயிற்சியில் இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேரத்தை எரிக் துசீங்கிஸிமானா முறியடித்துள்ளார்.

♈🇮🇳🌴சீன இராணுவத்தின் இணைய வழிப் போர் வல்லமை அதிகரிக்கப்படும்

தமது இராணுவத்தை முழுமையாக மறுசீரமைக்கப் போவதாக கூறியுள்ள சீனா, 2020 அளவில் இணையப் போர் தொடுக்கும் வல்லமை கொண்ட இராணுவமாக அதனை உருவாக்குவோம் என்று கூறியுள்ளது.

♈🇮🇳🌴அமெரிக்காவில் மாற்றுப் பாலின பள்ளி மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாலின அடையாளத்துக்கு ஏற்ப கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் பள்ளிக்கூடங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
♈🇮🇳🌴உடுமலையில், பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்ததில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

♈🇮🇳🌴200 போலீஸ் அதிகாரிகள் உடல் தானம் போலீஸ் கமிஷனரிடம் உறுதிமொழி பத்திரம் வழங்கினர்..மும்பை

♈🇮🇳🌴
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் வாராந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பராமரிப்பு பணி

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண்- தானே ரெயில் நிலையங்களுக்கிடையே விரைவு வழித்தடத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வாராந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதன்காரணமாக கல்யாணில் இருந்து சி.எஸ்.டி. நோக்கி வரும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 11.22 மணி முதல் பிற்பகல் 3.05 மணி வரை கல்யாண்- தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும். 

♈🇮🇳🌴6 மேல்-சபை எம்.பி. பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்பு

♈🇮🇳🌴கூட்டணியில் சேருவதற்காக எனக்கு பண ஆசை காட்டினார்கள் போட்டுடைக்கும் விஜயகாந்த்

♈🇮🇳🌴புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 22 ஆம் தேதி கூடுகிறது பிசிசிஐ பொதுக்குழு

♈🇮🇳🌴உடன்குடி பகுதி பிரசாரத்தில் கிராம மக்கள் முன்னிலையில் சிலம்பம் விளையாடிய சரத்குமார்

♈🇮🇳🌴கணவர் சங்கர் நினைவால் தற்கொலைக்கு முயன்ற கவுசல்யாவுக்கு மீண்டும் கவுன்சிலிங்
♈🇮🇳🌴பூத் சிலிப் கிடைக்காதவர்கள் 11 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் : லக்கானி

♈🇮🇳🌴 புதுச்சேரியில் குலாம் நபி ஆசாத் பேட்டி 

♈🇮🇳🌴 சென்னையில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம் 

♈🇮🇳🌴சென்னையில் அதிமுக - பாமக இடையே மோதல் 

♈🇮🇳🌴கும்ப மேளா நிறைவு விழாவில் பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் சிறிசேனவும் கலந்து கொண்டனர் 

♈🇮🇳🌴 ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை 

♈🇮🇳🌴கச்சதீவில் தேவாலயம் அமைவதை தடுக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல் 

♈🇮🇳🌴புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தல்: அமித்ஷா பிரச்சாரம் 

♈🇮🇳🌴 தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடம் : அன்பழகன் குற்றச்சாட்டு 

♈🇮🇳🌴 பணம் பட்டுவாடா செய்ததாக 3 நாட்களில் 101 பேர் மீது வழக்கு: லக்கானி  

♈🇮🇳🌴காஞ்சிபுரம்; குப்பை தொட்டியில் வாக்காளர் அடையாள அட்டைகள்  

♈🇮🇳🌴ஆட்சி அமைக்க அதிமுக., திமுக., ஆதரவு கேட்க மாட்டேன்: விஜயகாந்த்  

♈🇮🇳🌴அமெரிக்கா - பாக்., உறவில் விரிசல்  

♈🇮🇳🌴ஆப்கனுக்கு எதிராக பாக்., சதி : ஆப்கன் அதிபர்  

♈🇮🇳🌴தெற்கு ரயில்வேக்கு புதிய பி.ஆர்.ஓ.,  

♈🇮🇳🌴அச்சுப் பிழைகளை பொருட்படுத்த வேண்டாம்: தேர்தல் கமிஷன் 

♈🇮🇳🌴 குத்துச்சண்டை: விஜேந்தர் 6வது வெற்றி

♈🇮🇳🌴கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்ட விவகாரம்; பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார்

♈🇮🇳🌴காரை முந்தியதால் இளைஞரை சுட்டுக்கொன்ற விவகாரம்: குற்றத்தை ஒப்புக்கொண்டார் ராக்கி யாதவ்

♈🇮🇳🌴அணுசக்தி விநியோக குழுவில் உறுப்பினராக இந்தியா தயாராக உள்ளது: அமெரிக்கா தகவல்

♈🇮🇳🌴மோடி மீது ஏ.கே.அந்தோணி தாக்கு ‘கேரள தேர்தலில் உங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது’

♈🇮🇳🌴‘‘எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகளின் டெலிபோன் ஒட்டு கேட்பு’’ மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

♈🇮🇳🌴வங்காளதேசத்தில் தொடரும் வெறிச்செயல்: புத்த மத துறவி வெட்டிக்கொலை

♈🇮🇳🌴இந்திய எல்லை அருகே சீனா தனது படைகளை குவித்துள்ளது: பெண்டகன் தகவல்

♈🇮🇳🌴கேரளாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் பழங்குடி இன குழந்தைகளின் இறப்பு விகிதம், சோமாலியாவை விட அதிகமாக இருப்பதாக கூறினார்.

பிரதமரின் இந்த கருத்து கேரள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரதமருக்கு எதிராக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.மேலும், அம்மாநில முதலவர் உம்மன் சாண்டி, கேரளார மக்களிடம் மன்னிப்பு கேட்குமாறு மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், சோமாலியா நாட்டை சேர்ந்த குடிமகன் ஒருவர். மோடியை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மோடி உங்களிடம் பட்டம் சான்றிதழ் இல்லை, நான் சோமாலியான், என்னிடம் பட்ட சான்றிதழ் உள்ளது.

சோமாலியா, கேரளாவை விட சிறந்த நாடு இல்லை. ஆனால், உங்களை விட சோமாலியா சிறந்த நாடு என விமர்சித்துள்ளார்

♈🇮🇳🌴சவுதி அரேபியாவில் கணவரின் கைப்பேசியை அனுமதியின்றி மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை

♈🇮🇳🌴ரஷ்ய போர் விமானங்களை இடை மறித்த இங்கிலாந்து தைபூன் விமானங்கள்

♈🇮🇳🌴திருப்பூரில் கண்டெய்னரில் கொண்டு செல்லபட்ட ரூ.570 கோடி பறிமுதல்

கோவை சாலையில் இருந்து ஒரு சொகுசு காரை தொடர்ந்து 3 கண்டெய்னர் லாரிகள் அதற்கு பின்னால் 2 சொகுசு கார்கள் வந்தது-. சந்தேகம் அடைந்த பறக்குடை படையினர் அந்த கார் மற்றும் கண்டெய்னர் லாரிகளை நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் அவை சென்றது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த கண்டெய்னர் லாரிகளை 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று செங்கப்பள்ளி என்ற இடத்தில் மடக்கினர்.

பறக்கும் படையினர் கண்டெய்னர் லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அந்த நேரத்தில் கண்டெய்னர் லாரிக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த சொகுசு காரில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பறக்கும் படை அதிகாரிகளிடம் கோவையில் இருந்து தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு கண்டெய்னர்களில் பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தனர். 

அந்த நேரத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், துணை கமிஷனர் திஷாபட்டேல்  மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சண்முகம் ஆகியோர் செங்கப்பள்ளி பகுதிக்கு விரைந்து வந்தனர்.பின்னர் அவர்கள் 3 கண்டெய்னர் லாரிகளையும் திறந்து பார்த்தனர். அதில் கட்டு கட்டாக ரூ.570 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

முறையான ஆவணங்கள் இல்லை

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது 3 சொகுசு காரில் வந்தவர்களும் தாங்கள் ஆந்திரா போலீஸ் என்றும் கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் பணம் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு சொந்தமானது என்றும் தெரிவித்து சில ஆவணங்களை காட்டினர். ஆனால் அந்த ஆவணங்களில் தேதி தவறாக இருந்தது. மேலும்  போலீசார் என்று சொன்னவர்களிடம் அடையாள அட்டையும் இல்லை. 

இதையடுத்து ரூ. 570 கோடியுடன் 3 கண்டெய்னர் லாரிகளும், அதோடு வந்த 3 சொகுசு கார்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு 3 கண்டெய்னர் லாரிகளை சுற்றியும் தடுப்பு அமைத்து துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments