திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயிலில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செல்போன்கள் 27 தேதி இ ஏலம்

*திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயிலில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செல்போன்கள் 27 தேதி இ ஏலம்*
திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செல்போன்கள் மே 27 தேதி இ ஏலம் விடப்படவுள்ளதாக தேவஸ்தான வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட மற்றும் லேசாக சேதமான செல்போன்கள், புதிய சாம்சங் எட்ஜ்7 செல்போன்கள், பயன்படுத்தப்பட்ட மற்றும் லேசாக சேதமாகிய பவர்பான்க்குகள், ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை விசாகப்பட்டினத்திற்கு சேர்ந்த எம்.எஸ்.டி.சி. நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் ஏலம் விடப்படவுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 27 தேதி www.Mstcecommerce.Com / www.Mstcindia.Co.In என்ற இணையதள முகவரியில் சென்று ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு தேவஸ்தான மார்கெடிங் அலுவலகமான 0877 2264429, விசாகப்பட்டினம் எம்.எஸ்.டி.சி. உதவி மேலாளர் 9000131417 என்ற என்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments