லீலை கண்ணன் கதைகள்.....37…

லீலை கண்ணன் கதைகள்.....37…கிருஷ்ணன் கோவிந்தன் ஆகிறான்
கிருஷ்ணன் இந்திரனுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டிருந்த சமயம், ஒரு பசு அங்கு வந்தது. அது சாதாரணப் பசு அன்று, தேவலோகப் பசு! அதன் பெயர் காமதேனு. காமதேனுக்கு ஒரு தெய்விகச் சக்தி இருந்தது. யார் என்ன கேட்டாலும் அதனால் கொடுக்க முடியும். அதனால் மனிதக் குரலில் பேசமுடியும். காமதேனு கிருஷ்ணனைப் பார்த்து, ‘எங்கள் அதிர்ஷ்டம்தான் நீங்கள் இடையர்குலத்தில் பிறந்தீர்கள். என் குழந்தைகளாகிய எல்லாப் பசுக்களையும் நீங்கள் காப்பாற்றுகிறீர்கள். நீங்கள் எங்களுக்குத் தேவதேனாவீர்கள். தங்களை எங்கள் இந்திரனாக ராஜ்யாபிஷேகம் செய்யும்படி பிரம்மா கட்டளையிட்டிருக்கிறார்’ என்று சொன்னது.
பிறகு காமதேனு, தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், தேன், பால் எல்லாவற்றினாலும் கிருஷ்ணனை அபிஷேகம் செய்தது. கங்கையிலிருந்து நீர் கொண்டு வரும்படி இந்திரன் தன் ஐராவதத்தை ஏவினான். ஐராவதம் ஒரு தங்கக் குடத்தில் கங்கைநீர் கொண்டு வந்தது. இந்திரன் அந்த நீரைக் கொண்டு கிருஷ்ணனை அபிஷேகம் செய்தான். பிறகு இந்திரன் கிருஷ்ணனைப் பார்த்து, ‘இன்றையிலிருந்து நீங்கள் கோவிந்தன் என்று அழைக்கப்படுவீர்கள். கோவிந்தன் என்றால் பசுக்களின் இந்திரன் என்று பொருள். பசுக்களையும் இந்த உலகத்தையும் காப்பாற்றுவதனால் நீங்கள் கோவிந்தன் தான். நான் தேவர்களுக்கு மாத்திரம்தான் இந்திரன். நீங்களோ உயிருள்ள எல்லா பிராணிகளுக்கும் இந்திரன்’ என்று சொன்னான். இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்...

Comments