மே தினம் உழைப்பாளிக்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் இதை உறுதி செய்தது

மே தினம் உழைப்பாளிக்கு  8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் இதை உறுதி செய்தது என்று கொண்டாடினோம்.
ஆனால் தேர்தல் பணியில் எல்லாம் காற்றில் பறந்து விட்டது |
11 மணிக்கு தாலுக்கா ஆபீஸில் மீட்டிங்  மாலை 5 மணிக்கு கலெக்டர் ஆபீஸில் மீட்டிங் இரவு  10. மணி முதல் காலை 6 வரை பறக்கும் படை பணி. குடும்ப உறுப்பினர்கள் கேட்கிறார்கள் எங்க நீங்க ஒரு மாசமா ஆளையே காணோம்.
மே தின உரிமை எல்லாம் மண்ணா போச்சுடா மகனே தப்பி தவறி அரசு வேலைக்கு அதுவும் BDO ஆபிசுக்கு வந்துடாதே என்று தான் சொல்ல தோன்றுகிறது
கலெக்டர், கலெக்டர் -ன்னு சொல்லியே கலங்கடிப்பாங்க
இப்படியெல்லாம் கண் முழிச்சி ஜனநாயகத்தை நிமித்தபோறோம்.

Comments