அலுவலக கீதை.!!

அலுவலக கீதை.!!

நீ தனியாகத்தான் வந்தாய்,
தனியாகத்தான் போவாய்.
இங்கு உனக்கு என்று ஒன்றும் கிடையாது.
பணியாளர்கள் குறைவு என்று வருந்தாதே !
நீ தனியாகத்தான் போராட வேண்டும்.
யாரையும் நம்பி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே !
உற்றார் உறவினர் நண்பர்கள் சக பணியாளர்கள் என்பதெல்லாம் மாயை.
அவை அனைத்தும் மாயையின் சின்னங்கள்.
அதிகமாக உழைக்கும் காரணமாக உன்னை மீறி நடக்கும் பிழைகளுக்கும் அதற்குஉண்டான தண்டனைகளுக்கும் வருந்தாதே
!!
நீ அடுத்த பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஏங்காதே!!
தற்போது எந்த பதவியில் இருக்கிறாயோ அதில் திருப்தி பட்டுக்கொள் !
நீ எப்பொழுது இங்கு இல்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான்
இருந்தது.
நீ எப்பொழுது இருக்கப்போவதில்
லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம்நடந்து கொண்டுதான் இருக்கும்.
இதில் நீ என்று எதுவும் கிடையாது.
இன்று உனது வேலை எதுவோ, அது நேற்று வேறு ஒருவருடையதாக இருந்தது,
நாளை வேறு ஒருவருடையது ஆகி விட போகிறது.
நீ என்பது ஒரு மாயை.
தான் என்ற கர்வம் வர கூடாது.
இந்த மாயை மட்டுமே உனது அனைத்து கவலைகளுக்கும் காரணம்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறைகள், . என்கிற வார்த்தைகளை நீ மறந்துவிடு.
மாயையிலிருந்து விடு படு.
அப்படி இருக்கும் பட்சத்தில் நீதான் all in all.

Padithathil Pidithathu....

Comments