உலகத்தில் நாம் எதையும்

உலகத்தில் நாம் எதையும் ஒரு பெயரை வதைத்தோ உருவத்தை கொடுத்தோதான் நினைவில் வைத்துக் கொள்கிறோம். கடவுளை நினைத்துத் தியானம் செய்வதற்கும் இப்படி ஒரு வழி முறை தேவைப்படுகிறது.

வெளியே பார்த்ததும், பேசியும் பழகியும், உணர்ந்தே பழக்கப்பட்ட மனத்தை உள்முகமாகத் திருப்புவது என்பது சாதாரண காரியமல்ல.

அப்படிச் செய்வதற்கு இப்படி ஒரு படிக்கட்டு அவசியமாகிறது.

எல்லா உணவுகளுக்குமே ஒவ்வொரு வகையான பாதிப்பு உண்டு. சில உணவு வகைகள் அமைதியைத் தருகின்றன. வேறு வகை உணவுகள் மந்த நிலையையம், தூக்கத்தையும் உண்டு பண்ணுகின்றன. உணர்ச்சியைத் தூண்டும் மாமிச வகையைச் சார்ந்த ராஜஸ உணவையும், மந்தநிலையையும், சோம்பலையும் தூண்டும் தாமஸ உணவையும், நாம் தவிர்க்க வேண்டும். அமைதியைத் தரும் சாத்வீக உணவே தியானத்துக்கு ஏற்றது.

பிராணயாம்ப் பயிற்சி முடிந்ததும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் யோகிகள் படிப்படியாக, இப்படி ஒரு பயிற்சி இல்லாமலே நிரந்தரமாக அமைதியுடன் இருக்கும் நிலையை அடைய விரும்புவார்கள். அதைத்தான் சகஜ சமாதி என்று குறிப்பிடுகிறோம்.

மூச்சு என்பது குதிரையைப் போன்றது. மனம் என்பது அதன் மீது சவாரி செய்து குதிரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனும் கட்டுப்படுகிறான். இதுவே பிராணயாம்ம். மூச்சின் இலக்கத்தைக் கவனித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனத்தில் ஓடும் நினைவுகளும் கட்டுபடுகின்றன.

மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பது தானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.

விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.

நகர்ந்து செல்லும் வண்டியில், உறங்கிக் கொண்டு பயணம் செய்யும் பிரயாணிக்கு சலனமோ, அசைவுகளோ எதுவும் தெரியாது. ஏனெனில் அவனது மனம் அறியாமை இருளில் ஒடுங்கிக் கிடக்கிறது.

நதியின் கரையைச் சேர முயலும் மனிதன் அந்த நீரின் அலையோட்டங்களால் கரைசேர முயலுவது தடைப்படுவதைப் போல, சம்சாரம் என்னும் ந்தியிலிருந்து ஆத்மஞானம் என்னும் கரையைச் சேர விரும்புபர்கள் உலக இன்பங்களால் தடைபட்டு அதை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்.இன்றைய  நற்சிந்தனைகளின் வழி நடப்போம்..

Comments