அதி அற்புதமான மனித வாழ்வு பிறப்பிற்கும்- இறப்பிற்கும்


அதி அற்புதமான மனித வாழ்வு
பிறப்பிற்கும்- இறப்பிற்கும் இடைப்பட்ட மனித வாழ்க்கை அதி அற்புதமானது. அதை சிறப்பாக அமைத்துக்கொண்டு, இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் நிம்மதியாய் வாழ இயற்கை உருவாகி இருக்கிறது.
இந்த உலகமே ஐம்பூதங்கள் என்ற இயற்கையால் ஆனது.
உலகின் ஆதார சக்தியான சூரியன் நெருப்புக் கோளமானது. இதன் ஒரு பகுதி குளிர்ந்து, சாம்பலாக உதிர்ந்து மண்ணாக மாறி நிலமானது. இந்த மண்ணை குலுக்கிவிட்ட போது காற்று உருவானது. காற்று கருமேகங்களாகி மழையானது. அந்த மழை கீழே கொட்டியதும், செடி, கொடி, மரம், உயிரினங்கள்... எல்லாம் உருவானது! இதுதான் உலகம்!!
அதுபோல் நெருப்பு, மண், காற்று, நீர் ஆகாயம் போன்ற அம்சங்களின் உருவாக்கமே மனித உடல் என்று இந்தியாவின் சித்த மருத்துவமும், சினாவின் அக்குபஞ்சர் மருத் துவமும் உணர்த்துகின்றன.
உலகத்தின் உருவாக்கமாகிய ஐம்பூதங்களில் முரண்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது. தண்ணீர் அதிகமானால் மண்ணை அரித்துக்கொண்டு போய்விடும். ஆனால் தண்ணீரே இல்லா விட்டால் பூமி வறண்டுவிடும்.
காற்று அதிகமாகிவிடும்போது மரங்கள் சாய்ந்துவிடும். காற்றே இல்லாவிட்டால் மரங்கள் வளராது. நெருப்பு எரிய காற்று தேவை. ஆனால் காற்று மிக அதிகமாக இருந்தால், நெருப்பால் எரிய முடியாது. ஒன்றுக்கொன்று சமச்சீர் இல்லாமல் போனால், இய ற்கையின் இயக்கத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அழிவு தோன்றிவிடும்.
கொடைக்கானலுக்கு போனாலும் கோவில்பட்டிக்கு போனாலும் ஒரே இயற்கைதான். சில இடங்க ளில் செடிகள் மட்டம் இருக்கின் றன. சில இடங்களில் பூக்களும் கிடக்கின்றன.
தண்ணீர் ஒரு இடத்தில் இருக்கும். இன்னொரு இடத்தில் இருக்காது மண் எழு ம்பி மலையாக நிற்கும். சில இட ங்களில் மண் மட்டுமே இருக்கும்.
இயற்கைதான் எல்லா இடத்திலும் மண், மரம், நீர் எல்லாம் அதே தான்.
சில இடங்களில் இயற்கையை நாம் அழகு என்போம். சில இடங்களில் அதையே அழகற்றது என்போம். ஆனால் எல்லாம் இயற்கைதான். அதுபோல் மனிதர்களும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எல்லோருக்கும் அதே கண், காது, மூக்கு, வாய்....! ஆனால் அதிலும் அழகற்றவர் அழகானவர் என்று பிரித்துவிடுகிறோம். பணமுள்ளவன், பணமில்லாதவன், பலமானவன், பலகினமானவன் என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து மனிதனை மனிதனே பிரிக்கின்றான்.
மனிதன் சிந்திக்க வேண்டும். சிந்தனை தான் வாழ்க்கை. அனால் அதிகம் சிந்திக்கும் போது அவன் அடை யாளம் தெரியாத கவலைகளுக்கு ஆட்பட்டுவிடுகிறான். மனிதனின் வாழ்க்கைத் தரும் உயர்ந்து விட்டதாகக் கூறிக்கொண்டி ருக்கிறோம் அதனால் தனி மனிதனுக்கு என்ன கிடைத்தது என்று ஆராய்ந்தால், நோய்கள் அதிகரிப்பும், நிம்மதி இழப்பும்தான் பதிலாக அணிவகுத்து வருகின்றன.
நீங்கள் நிம்மதியாக இல்லாவிட்டால் பிறர் உங்களால் நிம்மதி அடை யவே முடியாது. அப்படி நீங்கள் மற்றவர்களுக்கு நிம்மதி வழங்கப் போவதுபோல் செயல்பட்டுக் கொண்டிருந்தால், உங்களையே நீங்கள் ஏமாற்றி உங்களைச் சார்ந்தவர்கள் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கிaர்கள் என்பதுதான் நிஜமாக இருக்கும்.
மனிதன் இயற்கையோடு வாழ்ந்த வாழ்க்கையை மறந்து இயற்கை யைத் தேடி வெகு தூரம் செல்ல வேண்டிய செயற்கை நிலைக்கு சென்றுவிட்டான். இயற்கைக்கும் அவனுக்கும் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.
ஆனால் இந்த இடைவெளி இயற்கை தரும் உணவிற்கும், உடலுக்கும் இல்லை. நீங்கள் அய்யப்பன் கோவில் அரவணையை சுவைக் கலாம். தெருக்கடை பாயசத்தையும் ருசிக்கலாம். அரவணை என்றால், கண்களில் ஒற்றி வாய்க்குள் இட்டுக்கொள்வீர்கள். தெருக்கடை பாயசத்தை செருப்பூக்காலோடு நின்று, அப்படியே வாயில் ஊற்றிக் கொள்வீர்கள்.
வெளிநாட்டில் இருந்து விமானத்தில் பறந்த வந்த சொக்லேட் என்றால் அதையும் பிரித்து சாப்பிட்டு விடுவீர்கள்.
* கோவிலில் இருந்து கிடைத்தது
* தெருக்கடையில் வாங்கியது
* விமானத்தில் வந்தது
எங்கிருந்து வந்தது என்பதில் இருக்கும் வித்தியாசம் அதை வாங்கி, வாய்க்குள் போடும் வரைதான். உடலுக்குள் செல்கிறது. உடல் அதில் எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை. வந்தது சர்க்கரை, நெய், கோதுமைப்பால், ஏலக்காய், எல்லாவற்றையும் அது அதற்குரிய முறையில் பிரிக்கிறது. தன் ஜீரண வேலையைத் தொடங்கி விடுகிறது.
அது போல் ஒரு மனிதன் எவ்வளவு உயர்ந்தவன், தாழ்ந்தவன், பதவியில் இருக்கிறவனா, பாதை ஓரத்தில் படுகிறவனா என்பதெல்லாம் அவன் இறந்து, அவன் உடலை தகன மேடைக்குக் கொண்டு சென்று தீயிடுவது வரைதான்.
அருகருகில் உள்ள தளங்களில் ஒரு ஏழை உடலும், இன்னொரு பிரமுகர் உடலும் வைக்கப்படுகிறது. ஏழைக்கு வறட்டி அமுக்கப் படுகிறது. பிரமுகருக்கு சந்த னக்கட்டை அடுக்கப்படுகிறது. வறட்டியா, சந்தனக் கட்டையா என்ற பேதம் தீக்கு இல்லை. அது பாட்டுக்கு கொழுந்துவிடத் தொடங்கி எரித்து சாம்பலாக்கி விடுகிறது.
மனிதனாகப் பிறந்தவன் எதையாவது ஒன்றை சாதித்துவிட்டுத்தான் இறக்க வேண்டும் என்பார்கள். சாதிக்கத் தெரியாதவர்கள். பிறக்க வேண்டியதில்லை என்

Comments