அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் .,

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்..,

மிதி வண்டி வைத்திருந்தோம்.,

எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.

ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

கபில் தேவின் கிரிக்கெட்.

குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது.

எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது

வீடுகளின் முன் பெண்கள் காலையில் கோலமிட்டார்கள், மாலைப்பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்

சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்

ஆடி 18 தீபாவளி பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே  திட்டமிடுவோம்

வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

/எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,

சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,

மழை நின்று நிதானமாக பொழியும்
,சாராய கடைகள் இருந்தன.,ஆனால் இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,

தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,

வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,

சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,

முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,

பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,

சுவாசிக்க காற்று இருந்தது.,குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்.,
.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே,ஆங்கிலம்.,

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால்
டவுசர்.,

கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

நம்பிக்கை களும்தான்..,

மொத்தத்தில் மரியாதை இருந்தது..

Comments