முக்கிய செய்திகள் 20/06/16 !

🚨இன்றைய🚨முக்கிய🚨செய்திகள் 20/06/16 !

ஒசூரில் குத்தி கொலை செய்யப்பட்ட ஏட்டு முனுசாமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி அவரது மகளின் உயர்கல்விச்செலவை அரசே ஏற்கும் - தமிழக முதல்வர்  ஜெயலலிதா அறிவிப்பு.

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மினி பேருந்தில் தற்கொலைபடை தாக்குதல்
20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

விற்பனை குறைவாக உள்ள 500 மதுக்கடைகளை அரசு மூடியதால் பொதுமக்களுக்கு பயனில்லை - அன்புமணி ராமதாஸ்.

ஆசிரியர்கள் இனி டியூஷன் எடுத்தால் நல்லாசியர் விருது கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு.

வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிரிழக்கும் போலீசாருக்கு உதவித்தொகை உயர்த்தப்படும்  உதவித்தொகையை உயர்த்த சட்ட திருத்தம் கொண்டு வர தலைமைச் செயலாளருக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது - தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணியில் தொடர வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு.

ஒரு புதுப்படம் வெளியாகும் முன்பே திருடி விற்பதும் இணையதளத்தில் வெளியிடுவதும் இன்று அன்றாட நிகழ்வாகி வருவது கண்டனத்துக்குரியது - தமிழிசை சவுந்திரராஜன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு தமிழர்களை கொன்று குவித்த ஆல்பர்ட் துரையப்பா பெயரை சிங்கள அரசு சூட்டி, பிரதமர் மோடியை வைத்தே திறக்க வைத்துள்ளது - பழ.நெடுமாறன்.

Comments