வாழ்க்கை தத்துவம் தொகுப்பு

🗣வாழ்க்கை தத்துவம் தொகுப்பு ✌🏻

👉🏻 இனிமை, பயம், அருவருப்பு, துயரம், குழப்பம் என எதுவானாலும் நிஜத்தைவிட அழுத்தமான உணர்வை உறக்கத்தில் பதிக்க வல்லது கனவு.

👉🏻 அதன் நுட்பம் மற்றும் உணர்வுப் பூர்வமான காட்சிகள் இயற்கையின் தயாரிப்பு என்பதால் சினிமாக்களுக்கே அளவுகோல் எனலாம்.

👉🏻 கனவின் சில கலகலப்பு
எல்லோருக்கும் கனவு வருவதால், கனவுக்கு எல்லா மொழியிலும் வார்த்தை இருக்கும்.

👉🏻 ஆனாலும், ’Dreams’ இந்த வார்த்தை, ‘dragmus’ எனற ஜெர்மன் வார்த்தையை மூலமாகக் கொண்டது.

👉🏻 அதற்கு, ஏமாற்றுதல், மாயை, மறைமுகம் போன்ற அர்த்தங்கள் உண்டு.

👉🏻 உறக்கத்தில் குறட்டையும் கனவும் ஒரே நேரத்தில் நிகழாது.

👉🏻 பெரியவர்களுக்கு கனவு விட்டுவிட்டு மொத்தமாக ஒரு மணிநேரம் வரை சராசரியாக நிகழ்கிறது.

👉🏻 அரைமணி முதல் மூன்றுமணி நேரம் வரை கனவுகள் ஒரு நாளில் நிகழலாம்.

👉🏻 நம் இறப்பு வரையில், வாழ்நாளில் கால் பகுதியை தூங்குவதற்கு செலவிடுகிறோம்.

👉🏻 அதில் 6 ஆண்டுகள் கனவுகளில் மிதக்கிறோம். ஆனால், அந்த கனவுகள் நம் நினைவில் நிற்பதில்லை.

👉🏻 ஒரு நாளைக்கு 4 வீதம், ஒரு வருடத்தில் சராசரியாக 1,460 கனவுகள் நிகழ்கிறது.

☀சூரிய கடவுளை வணங்கும் எகிப்தியர்கள், கனவுகளை அக்கடவுளின் விளையாடலாக கருதுகின்றனர்.

💂🏻ஃபூ கீன் என்ற சீன மாகாணத்தில் இடுகாட்டில் உறங்கும் முன்னோர்கள், தங்களுக்கு ஏற்படுத்தும் குறிப்பாகவே கனவை நினைக்கின்றனர்.

🔬விஞ்ஞான ஆய்வுப்படி, கனவுகளில் காட்சிகள் அதிகமாக வருவதோடு அதன் ஒலிகளும் தொடு உணர்ச்சிகளும் மெய்யாக இருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆச்சரியம்.

💑 இதை பருவ வயதில் காதல், காமம் சார்ந்த கனவுகளில் எல்லோருமே உணர்ந்திருக்க கூடும்.

✝ கிறிஸ்தவ மதத்தின் புதிய ஏற்பாட்டின்படி, ஏசுவின் தந்தையும் மேரியின் கணவருமான ஜோசப்புக்கு ஏற்பட்ட ஆறு கனவுகள் தெய்வீக அறிவு, கட்டளை, எச்சரிக்கை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

👶🏻பிறந்த குழந்தைக்கு 80 சதவீதம் தூக்க நேரமே, அதில் அளவுக்கு அதிகமான கனவுகள் நிகழ்கிறது.

😇 புரிந்துகொள்ள முடியாத அந்த பருவம் முற்பிறப்புக்கு மிக நெருக்கமானது அல்லவா?

📈பிளாட்டோவின் கூற்றுப்படி, கனவுகள் வயிற்றுப் பகுதியிலிருந்தே தொடங்குகிறது.

🔬கனவுகளுக்கான உயிரியல் இருப்பையும் விவரிப்பையும் கல்லீரலிலே காணமுடிகிறது.

🤗எலியஸ் ஹோவே(1819- 1867) தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தது கனவில் கிடைத்த உத்வேகமே.

👉🏻 மனிதனை சாப்பிடும் மனிதர்களால் தாக்கப்படுவதாகவும், பிறகு, காயங்கள் ஊசி போன்ற ஒரு பொருளால் சரிசெய்யப்படுவது போலவும் கனவில் கண்டார்.

👉🏻காயங்களால் மனம் மற்றும் உடல் அதிகமாக பாதிப்புக்கு உள்ளான சில நபர்களை தவிர எல்லோருக்கும் கனவு ஏற்படுகிறது.

👉🏻 கனவு ஒரு உயிரியல் உண்மை, இதை எல்லோரும் காணுகின்றனர்.

👉🏻 ஆனால், அதை நினைவில் வைத்துக்கொள்ளாமல் மறப்பதால் சிலர் கனவு வராதவர் போலவும் உணர்கின்றனர்.

👉🏻 ஒவ்வொரு 90 நிமிட இடைவெளிகளிலும் நமக்கு கனவு வருகிறது. நீண்ட கனவுகள்(30-45 நிமிடங்கள்)

✨ விடியற்காலையிலே ஏற்படுகின்றன.

👉🏻 கனவை பற்றிய ஆய்வுக்கு ‘Oneirology’ என்று பெயர்.

👉🏻 லத்தீனில் ’ஓனிரோஸ்’ என்றால் கனவு பற்றிய கடவுள். ‘ology’ என்றால் எழுதுதல்.

👉🏻 மேற்கு ஆப்பிரிக்காவில் அசண்டி இனக்குழுவில், சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு கனவு குற்றமே இன்னும் வழக்கத்தில் உள்ளது.

🙄அதாவது இன்னொருவர் மனைவியோடு உல்லாசமாக இருப்பதுபோல ஒருவருக்கு கனவு வந்தால், அது எந்தவிதத்திலாவது வெளியில் தெரிந்துவிட்டால் கனவை கண்டவருக்கு தண்டனை.🙊

👉🏻கனவுடைய தூக்கத்தில் மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால், உடல் வெப்பநிலையும் அதிகரிக்கும்.

👉🏻 பற்கள் இழப்பது (அ) உடைவது போன்ற கனவுகள், தனக்கு உதவ யாரும் இல்லை என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படும்.

👉🏻 ஆண்களைவிட பெண்களுக்கே பற்கள் கனவு வரும்.

👉🏻 அழுக்கான நீர்நிலைகள் கனவில் வந்தால், அது நமது ஆரோக்கியமின்மையை உறக்க நிலையில் உணர்த்துவதன் அறிகுறி.

👉🏻 இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த கனவுகளை, நடக்காததற்கும் நிலைக்காததற்கும் உவமையாக பேசுகிறோம்.😡

👉🏻 ஆனால், நமது ஆன்மாவின் பயணத்தில் அது அடைந்து வந்திருக்கும் ஏராளமான பிறவிகளே அதற்கு கனவுகள் போலதான் என்கிறார் ஒரு அறிவியல் அறிஞர்🤓.

📢
👉🏻

Comments