மோடியின் அதிரடியால் சின்னாபின்னமான சீனாவின் முத்து மாலை திட்டம்...

மோடியின் அதிரடியால் சின்னாபின்னமான சீனாவின் முத்து மாலை திட்டம்...

மோடியின் ராஜதந்திரத்திற்கு மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. பங்களாதேசில் சீனா மேற்கொண்டிருந்த காக்ஸ் பஸாரில் உள்ள ''சொனடியா'' துறைமுக அபிவிருத்தி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பங்களாதேசின் 'பெய்ரா' ஆழ் கடல் துறைமுகத்தினை மேம்படுத்தும் ஒப்பந்தத்தினை  இந்தியாவிற்கு வழங்கியுள்ளது பங்காளதேச அரசு. சீனாவிற்கு கெட் அவுட் சொல்லிவிட்டு இந்தியாவிற்கு வெல்கம் சொன்ன பங்காளதேச அரசிற்கு இந்தியர்களின் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

இதன் மூலம் இந்தியாவை சுற்றி முத்துமாலை என்ற பெயரில் சீனா உருவாக்கி வைத்த மாயவலையை மோடி முற்றிலுமாக அறுத்து விட்டார் என்றே சொல்லலாம்.

சீனா இந்தியாவை சுற்றி உருவாக்கி வைத்திருந்த திட்டம்தான் முத்து மாலை திட்டம், இந்த திட்டத்தின் படி இந்தியாவின் கிழக்கே பங்காளதேசத்தில் உள்ள  வங்காள விரிகுடாவில் சிட்ட காங்கில் உள்ள சொனடியா துறைமுக அபிவிருத்தி திட்டம், அடுத்து தெற்கே இலங்கையில்  இந்தியபெருங்கடலில்  ராஜபக்சேயின் பெயரால் புதிதாக உருவாக்கபட்ட "ஹம்பாந் தோட்டை" துறைமுகம்.

அடுத்து அரபிக்கடலில் பாகிஸ்தானில் "குவாடர்" துறைமுக விரிவாக்கம் என்று இந்தியாவின் மூன்று திசையிலும் உள்ள நாடுகளில் உள்ள துறைமுகங்களை கைப்பற்றி  அபிவிருத்தி என்ற பெயரில் தன்னுடைய கடல் படைகளை   இந்தியாவை சூழ்ந்து மூன்று திசைகளிலும் நிலை நிறுத்துவது. இது தான் சீனாவின் மாஸ்டர் பிளான். இது இந்தியாவின் கழுத்தில் போடப்படும் மாலை போல உள்ளதால் இதற்கு முத்துமாலை திட்டம் என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் இந்தியா-சீனா போர் வந்தால் மும்முனையில் இருந்து இந்தியாவை தாக்குவதற்கு வசதியாக இருந்தது இந்த திட்டம்.

பங்காளதேசில்  சீனா துறைமுக மேம்பாட்டின் பேரில் உள்ளே நுழைந்ததையும் இலங்கையில் சீனாவின் உதவியுடன் ஹம்பா ந்தோட்டையில் துறைமுகம் அமைந்ததையும் பாகிஸ்தானில் குவாடர் துறை முகத்தை தன்னுடைய கட்டு பாட்டிற்குள் சீனா கொண்டு வந்ததையும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு வேதனை தெரிவித்து அறிக்கை விட்டு விட்டு ஒதுங்கி கொண்டது முந்தைய காங்கிரஸ் அரசு

இத்தாலிகாரிக்கு இந்தியா மீது பெரிதாக என்ன அக்கறை இருக்க முடியும்?ஆனால் நம்முடைய மோடி அப்படி இருப்பாரா? இருக்கமுடியுமா..இது நம்முடைய தாய் பூமியல்லவா..சக்கர வியூகத்தை கண்டு பிடித்த நமக்கு அதை உடைக்க தெரியாதா என்ன?

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சீனா கையகபடுத்தியதன் மூலம் அரபிக்கடலில் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் சீனா எளிதில் மேற்கொள்ள முடியும். இப்படி இந்தியாவை சுற்றி சக்கர வியூகம் அமைத்த சீனாவிற்கு 'செக்' வைக்கும் முயற்சிகளை மோடி தலைமையில் உள்ள பிஜேபி அரசு தொடர்ந்து செய்துவருகிறது.

இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனாவை விரட்டுவதற்காகவே ராஜபக்சே வீட்டிற்கு அனுப்பபட்டு, மைத்ரி பால ஸ்ரீசேனா இந்தியாவின் உதவியுடன் ஆட்சிக்கு அழைத்து வரபட்டார். இதனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தடுக்கபட்டு இந்தியாவின் கண்ட்ரோலில் வந்தது இலங்கை. அதுமட்டுமல்லாமல் சீனா மேற்கொண்டிருந்த கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் நிறுத்தபட்டு   கொழும்பு துறை­முக நகர் திட்டம், கொழும்பு துறை­முக அபி­வி­ருத்தி திட்டம், திரி­கோ­ண­மலை துறை­முக அபி­வி­ருத்தி திட்டம் ஆகிய அனைத்திலும் இந்தியா நுழைய உள்ளது.

அரபிக்கடலில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை மேம்படுத்தி சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை இணைக்கும் பணியினை சீனா செய்து கொண்டு வருகிறது. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு செக் வைக்கும் முயற்சியாக பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து 76 கி.மீ., தூரமே உள்ள ஈரானின் "சாபகார்" துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா அனுமதி பெற்றுள்ளது.

இதன்படி இந்த துறைமுகம் இந்தியாவின் கட்டுபாட்டிற்குள் வந்து விட்டது. இங்கு வேலையையும் தொடங்கி விட்டோம் என்று நிதின் கட்காரி ஏற்கனவே அறிவித்து விட்டார். அது மட்டுமல்லாமல் இப்பொழுது ஈரானின் சாபகார் துறைமுகத்திற்கு அருகிலேயே யூரியா தொழிற்சாலையை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் சீனா, இந்தியாவை சுற்றி பங்காளதேஸ், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நிறுவிய மாயவலையை பங்காளதேஸ், இலங்கை ஆகிய நாடுகளை இந்தியாவின் பிடிக்குள் தன்னுடைய ராஜதந்திரத்தினால் கொண்டு வந்த மோடி பாகிஸ்தானை திருத்த  முடியாது என்பதால் பாகிஸ்தானிற்கு பக்கத்தில் ஈரானில் நின்று பதிலடி கொடுக்க தயாராகி விட்டார்.
👍👍👍

Comments