பிடிச்சவங்க

புருசன் மொபைல நோண்டிக்கிட்டும்.
பொண்டாட்டி சீரியல் பாத்துக்கிட்டும் வீட்ல வெட்டியா பொழுது போக்கிட்டு இருக்காங்க.

திடீர்னு மனைவிக்கு பளீர்னு ஒரு ஐடியா!

ஏங்க எனக்கு போரடிக்குது அந்த மொபைல கொஞ்சம் கீழ வைங்க....."

ஏண்டி எனக்கும் போரடிக்கணுமா...!

அதில்லீங்க போரடிக்காம இருக்கறதுக்கு நாம ஒரு கேம் வெளயாடலாமா?..."

ஹைய்யா...நான் ரெடி....என்னா கேமு சொல்லு.....

இந்தா, இந்த பேப்பர்ல நான் எனக்குப் புடிச்ச அஞ்சு ஆம்பளைங்க பேர எழுதுறேன். நீங்க உங்களுக்குப் புடிச்ச அஞ்சு பொம்பளைங்க பேர இன்னோரு பேப்பர்ல எழுதுங்க...

"சரி...."

இந்தாங்க என்னோட லிஸ்டு.... உங்கள்த காட்டுங்க...

மனைவி லிஸ்ட்:
1. ரஜினிகாந்த் 
2. கமல்ஹாசன் 
3. அஜீத் 
4. விஜய் 
5. சூர்யா    

புருசனோட லிஸ்ட்:
1. மல்லிகா (கொழுந்தியாள்)
2. கமலா (பக்கத்து வீட்டுக்காரி)
3. ஷாலினி (பொண்டாட்டியோட பிரெண்டு)
4. லீனா (பையனோட க்ளாஸ் டீச்சர்)
5. லலிதா (பழைய காலேஜ்மேட்)

நீதி:
பெண்கள் 
கனவில் வாழ்கிறார்கள்.
ஆண்கள் எதார்த்த உலகில் இருக்கிறார்கள்..!😂🤪

 முக்கியமான இன்னொரு நீதி: இப்படித்தான் போட்டு வாங்குவாங்க. உஷார்

Comments