உண்ணுவதற்கு முன் உரைப்போம் நன்றி

**

சேற்றில் இறங்கி 
விதை விதைத்து
சிரமம் நூறு சந்தித்து,
தரமாய் விளைச்சல் தான்செய்த,
உயர்வான எங்கள் *விவசாயிக்கும்* , 

அறுக்கையிலும், 
அடித்து உதிர்க்கையிலும்,
அளந்து சாக்கில் அடைக்கையிலும்,
பல கை மாறியும்,
இச்சோற்றை பக்குவமாய் 
நம் கையில் சேர்த்த *இறைவனுக்கும்* ,

நம்முடைய பசியென்னும் தீயை அணைக்க,
தீக்குளித்த *விறகுகளுக்கும்* ,

நெருப்பின் மீது வைத்தும்,
வெறுப்பினைக் காட்டாது
வெம்மையை பொறுத்துக்கொண்ட
 *மண்பாணைக்கும்*,

உணவாய் உருமாற
உளையில் கொதித்த
 *அரிசிகளுக்கும்* ,

பக்குவமாய் சமைத்து
பாசமாய் பறிமாறும்
 *மனைவிக்கும்* ,

உலக பசி தினமான இன்றுமுதல்,  
உண்ணுவதற்கு முன் உரைப்போம் நன்றி!

 *புனிதன்*
9840682682

Comments