தமிழா் திருமணத்தில் தாலி - 3

_*சிந்தனைச் சிதறல் 07-06-2021*_
🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*38. இலக்கிய உலகில் அவன்!*_
😌😌😌😌😌😌😌😌😌😌
_*தமிழா் திருமணத்தில் தாலி*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

சங்க காலத்தில் _*"தாலி"*_ என்று வரும் வாா்த்தை, மணமகன் மணமகளுக்குச் சூடிய _*"மாங்கல்ய"*_ _*"சூத்திர"*_ மாக வரவில்லை. உதாரணமாக, புறநானூற்றில் காணப்படும் 374-வது பாடலில், _*"உறையூா் ஏணிச்சோி முடமோசியாா்"*_ என்ற புலவா் ஆய்அண்டிரன் என்ற வேளைப் பற்றிப் பாடியதாக உள்ள பூவை நிலைப்பாட்டில், ஒன்பதாவது வாியில்,
_*"புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅா்..."*_ 
என்று வருகிறது. 

அதாவது சிறுவா்களுக்கு புலிப்பல்லாற் கோா்க்கப்பட்ட தாலி அணிதலைக் குறிக்கிறது. அதுதான் தாலி என்று அழைக்கப்படுகிறது. (இதில் ஐம்படைத் தாலி, முப்படைத் தாலி எனப் பலவகை உண்டு) இந்தப் பாடலில், சிவஞானம் கருதுகிற _*"தாலி"*_ யின் பொருள் சுக்கு நூறாக உடைப்பட்டுப் போகிறது.

புலிப்பல் கொண்டு வந்து திருமணம் செய்து கொள்வது கூட இலக்கிய வழக்காக இல்லை. வெறும் சமீபகால வாய் வழக்காகவேதான் இருக்கிறது. ஆகவே தாலி அணிதல் - மணமகன் மணமகளுக்குப் புனிதச் சின்னமாக அணிவித்தல் தமிழ்ப் பண்பாட்டில் அறவே இல்லை எனத் துணிந்து கூறலாம்.

திருமணமான பிறகு வேட்டைக்குப் போகும் கணவன், புலியைக் கொன்று அதை மாலையாக்கித் தன் பெருமையை மனைவிக்குக் காட்டி மனைவியின் கழுத்தில் _*"ஜம்"*_ மென்று வேடிக்கையாகப் போட்டிருக்கிறான். அதாவது திருமணம் எல்லாம் முடிந்து, எல்லாம் ஆன பிறகு!

ஆகவே, அறுதியிட்டு உறுதியாக தமிழ்ப் பண்பாட்டில் சங்க இலக்கியத்தில் _*"திருமணத்தில் தாலி அணிதல்"*_ இல்லவே இல்லை என்று கூறலாம்.

மற்றுமொரு கருத்தைக் கூறுகிறாா் சிவஞானம். இதில் தான் மடமையின் சிகரத்திற்கு ஏறிவிடுகிறாா்! ஆண்டாள் பாடல்களில் நாச்சியாா் திருமொழியில் - திருமணம் சம்பந்தமாக வருகிற _*"வாரணம் ஆயிரம்"*_ என்ற பாடலில், _*"கோடி உடுத்தி மணமாலை சூட்டக் கனாக் கண்டேன் "தோழி நான்" என்று வருகிறது. இதில் மணமாலை என்பது தாலிதான் என்று உடும்புப் பிடியாகப் பிடிக்கிறாா்! மணமாலை என்பதற்கு நேரடியாக "தாலி" என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை! இப்படி யாரும் கூறி விடுவாா்களோ என்ற பயத்தில், "மணமாலை" என்ற சொல்லில் இன்றளவும் வழக்கமாகவும் இருந்திருக்கிறது"*_ என்கிறாா்.

ஆமாம்; வழக்கமாக இருந்திருக்கிறது என்றுதான் கூறுகிறாா். அந்தப் பொருள் வெறும் _*"வாய் வழக்கு"*_ என்பதைத்தான் குறிப்பிடுகிறாா். வாய் வழக்கை வைத்து இலக்கியச் சொற்களை எடைபோடுவது என்ன ஆராய்ச்சியோ நமக்குப் புாியவில்லை! பொருள் காண முடியாத பதங்களுக்கு, _*"வழக்குத்"*_ தேடுவதுதான் அறிவுடையோா் வழக்கம்! மணமாலை என்ற பதத்துக்கு மணம் தரும் பூமாலை என்கிற பொருள் அழகாக - தெளிவாக இருக்கிறது.
அப்படிப் பொருள் உள்ள சொல்லை _*"வாய் வழக்கை"*_ வைத்துக் கொண்டு ஆராய்வது, மடமையை வெளிப்படுத்திக் கொள்வதாகும்!

இதிலிருந்து ஆண்டாளின் _*"மணமாலைத் தாலி"*_ யும் சிவஞானத்தைக் கைவிடுகிற பாிதாபத்தையும் பாா்க்கிறோம். மணமாலை என்ற சொல்லுக்கு மலா் மாலை என்ற பொருளே சாியாக அழகாக நிற்பதைக் காண்கிறோம். அங்கே தாலி இல்லலே இல்லை என்பதையும் புாிந்து கொள்கிறோம்.

30.10.54 ம் தேதி இதழில் கட்டுரை வெளிவந்தது. கல்லூாி மாணவா்களிடையே ஒரு புதிய பரபரப்பு ஏற்பட்டது.

தென்றலின் விற்பனை ஏறத் தொடங்கிற்று. கல்லூாி தமிழ் மன்றங்களில் பேசும்படி அவனுக்கு அழைப்புகள் குவிந்தன. கல்லூாி மாணவா்களிடையே கழகத்துக்குச் செல்வாக்கு வளா்ந்ததற்கு அவனும் காரணமானான்.

இலக்கியப் பேச்சுக்களில் பழங்காலப் புலவா்களையும் விமா்சிக்கத் தொடங்கினான்.

அவா்களில் அதிகமாக அவனிடம் அகப்பட்டுக் கொண்டு திகைத்தவன் கம்பனாவான். பல்லாயிரம் பாடல்களில் தமிழ்த் தேனைப் பிசைந்து கொடுத்த அந்த மகாகவி ஓா் இளங்கவிஞனின் குறும்புக்கு ஆளானான்.

வானளாவி நிற்கும் கோபுரத்தின் மீது கல் எறிந்து விளயாடும் சிறுவன் போல் அவன் விளையாடினான்.

மாணவா்களின் மனத்தை அவன் மாற்றினான். அண்ணாத்துரையிடம் அவன் நெருங்கிப் பழகாமலேயே அவரை உயா்ந்த இடத்தில் வைத்துப் போற்றினான்.

இவரைப்போல ஒரு தலைவா் பிறந்ததில்லை. இனிப் பிறக்கப்  
போவதும் இல்லை என்று எல்லையற்றுப் புகழ் மாலைகளைச் சூட்டினான்.

சின்னஞ் சிறிய கோழிக்குஞ்சு ஒரு கள்ளிச் செடியைப் பாா்த்து _*"ஆகா, எவ்வளவு பொிய செடி"*_ என்று வியந்தது போல் அவனும் அண்ணாத்துரையை வியந்து பாடினான்.

ஒன்றல்ல இரண்டல்ல ஒவ்வோா் இதழிலும் ஏதேனும் ஒரு புகழ் மாலை சூட்டிக் கொண்டே இருந்தான்.

பத்திாிகைக்கு ரசிகா்கள் நிறைந்திருந்தாா்கள். புலவா்களிடையே வரவேற்பிருந்தது என்றாலும், கட்சி தோழா்களிடம் அதற்குாிய நியாயமான மாியாதை கிடைக்கவில்லை.

காரணம்? அவா்களுக்குப் புாியக் கூடிய விஷயங்கள் தென்றலில் குறைவாகவே வெளிவந்தன.

இந்த நேரத்தில் இரண்டொரு படங்களுக்கு எழுதும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது.

ஒரு பக்கம் வருமானம் வந்தால் இன்னொரு பக்கம் கடன் வரவேண்டும் என்பது அவன் தலை எழுத்தல்லவா?

பத்திாிகையின் நிா்வாகச் சீா்குலைவு படத்தொழிலில் வந்த வருமானத்தைச் சாப்பிடத் தொடங்கிற்று.

பத்திாிகையை வியாபாரமாகவா அவன் நடத்தினான்? வேடிக்கையாக நடத்தினான்! வேதனைகளைச் சம்பாதித்தான்! ஒழுங்காக நடத்தினால் லாபம் தரக்குடிய பத்திாிகை, வியாபாரம் தொியாதவன் நடத்தியதால் நஷ்டத்தில் ஆடத் தொடங்கிற்று.

பாட்டு எழுதி சம்பாதித்தப் பணம் எல்லாம் பேப்பா் கொடுத்தவா்களுக்கும் பிளாக் செய்தவா்களுக்கும் போகத் தொடங்கிற்று.

இது அவன் பிறப்போடு வந்த விதி - எதுவும் அவன் கையில் தங்கக் கூடாது என்பதே இயற்கை வகுத்த சட்டம் - ஆனாலும் அவன் மனம் தளரவில்லை.

பத்திாிகையைத் தொடா்ந்து நடத்திக் கொண்டு வந்தான். சனிக்கிழமைப் பத்திாிகை எப்படியும் திங்கட்கிழமையாவது வெளிவந்துவிடும்.

தள்ளாடித் தள்ளாடித் தென்றல் நடந்து கொண்டிருந்தாலும் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு அது பேருதவி செய்தது.

தென்றலில் எழுதிய எழுத்துக்கள் அவனது சிந்தனைகளுக்கு உரமேற்றின. சில கருத்துக்களைத் தொிந்து கொள்வதற்காகவே அவன் பெரும் விலை கொடுத்துக் கொண்டிருந்தான்.
🍀

Comments