கூடுகிறது

கூடுகிறது...
வயது கூடுகிறது....
வயது கூடிக்கொண்டே போகிறது ! !

நாளை என்ன நடக்கும்?
யாருக்கும் தெரியாது.
எப்படி வாழ்க்கைச் செல்லும்?
யாருக்கும் தெரியாது.

இந்த நிலை தொடருமா ...
தொடராதா....
நீண்ட நாள் வாழ்வோமா !
யாருக்குத் தெரியும்.

வெறுங்கையுடன் தான் பிறந்தோம்.
வெறுங்கையுடன் தான் போகப் போகிறோம்.
அதனால், கஞ்சத்தனமாக வாழாதீர்கள்.
மகிழ்ச்சியாய், மனநிறைவாய் வாழுங்கள்.

கவலைப்படாதீர்கள்...
குழந்தைகளை நினைத்து வருந்தாதீர்கள் .
அவர்கள் விதி ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டது.
பணத்தை விட ஆரோக்கியமே முக்கியம்.

ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும், மூட்டை மூட்டையாய் நெல் விளைந்தாலும், ஒரு நாளுக்கு உண்ணப்போவது என்னவோ அரை கிலோ அரிசி சோறு தான்.

அரண்மனை போல் வீடு இருந்தாலும், தூங்கப்போவது என்னவோ எட்டுக்கு எட்டு இடந்தான்.
பிரச்சினை இல்லாத மனிதன் உண்டா?
கவலையை விட்டொழியுங்கள்.
யாரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள் .

எப்போதும் நல்ல மனநிலையில் இருங்கள்.
நாள்தோறும் நடைப்பயிற்சி/ தியானம்/ உடற்பயிற்சி/ யோகா என ஏதாவதொன்றைச் செய்யுங்கள்.
ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.
கொரோனாவை வெல்லுங்கள்.

நம்மிடத்திலும் , நம்மைச் சுற்றிலும் நல்லவையாகவே நடக்க வேண்டும் என எண்ணுங்கள்.
ஏனெனில்,
எண்ணம் போல் வாழ்க்கை அல்லவா ?
எண்ணத்தின் உயரம்
வாழ்க்கையின் உயரம்.

நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்தினால்
எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.
எதைச் செய்தாலும் உன்னதத்தோடு செய்.
வாழ்க்கை வசந்தமாகும்.
💐🌸🌺🌹🌷💐
தெரிந்து கொள்வோம்...

உடலுழைப்பு இல்லாத மித வாழ்க்கை முறையில் உள்ளவர்களையே நோய்த்தொற்று அதிகம் பாதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

உலகளவில் 6 சதவீதம் இறப்புகளுக்கும் உடலுழைப்பு இல்லாமையே காரணம் என அதே உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

எனவே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நடைப்பயிற்சி, நடந்து சென்று பொருள் வாங்குதல், மிதி வண்டியில் செல்தல், மித ஓட்டம் ஓடுதல், வீட்டு வேலைகளை நாமே செய்தல் மிகவும் நல்லது.
இதற்குப் பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்ற எளிய விளையாட்டகளை விளையாடலாம்.

சிந்திக்கும் ஆற்றலை உபயோகிக்காமல் வாழ்வதும்,
இலக்கின்றி அம்பெய்வதும் ஒன்றே !

Comments