எண்ணு

😎😎😅😅

*ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்*....சிறிய சச்சரவு...பெரிதாகி...கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை..
இது நீடிக்கவே...எ மனைவி அவள் கணவன் எதிரில் வந்து...
நான் இப்போது 10 வரை எண்ணுவேன் ! அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்....
நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன்.
அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அவன் அதைத் தான் எதிர்பார்த்திருந்தான். 

அவள் எண்ணத் துவங்கினாள் .... ....

*மனைவி* - 1 ... 2 ... 3 ...

*கணவன்* -  (அமைதி) ... !

*மனைவி* - 4 ... 5 ...

*கணவன்* -  (மவுனம்)

*மனைவி* -  6 ... 7...

*கணவன்* -  (அவன் மனதில் மகிழ்ச்சி... ஆனாலும் அமைதி)

உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ...

*மனைவி* - 8 ... 9 ...

*கணவன்* - (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி ...)

*மனைவி* ...

(அமைதி) ...

(பயங்கர மவுனம்)

...

...

பிறகு கணவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.
உணர்ச்சி வயப்பட்டு கத்தினான் !
எண்ணு ... எண்ணு ... 
*ஏன் மேற்கொண்டு எண்ணாமல் நிறுத்திவிட்டாய்*?

*Wife*- ( மிகவும் அமைதியாக)நல்ல வேளை! நீங்க பேசிட்டீங்க... இல்லைனா நான் போயிருப்பேன் ...!! 

கணவன்  - 😢😢😢😢

இதுக்கெல்லாம் பரிகாரமே 
கெடையாதா...😏😏😨😨

Comments