ஒரு சினிமா நடிகனுக்கு உடல் நலக்குறைவு என்றால், அவன் வாந்தி எடுத்தால் உங்களுக்கு ஏன் இத்தனை ஆர்பாட்டம்? ஒரு சினிமா நடிகன் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள ஒருவரை சந்திக்கிறான் என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இப்படி கூப்பாடு போடுகிறீர்கள்? இவர்களைத்தவிர நாட்டில் வெறும் ஒன்றுமே நிகழ்வுகள் இல்லையா? ஒரு நடிகன் தன் ரசிகர் மன்றத்தை கலைதுவிட்டதாக கூறினால் அது மகா பெரிய செய்தி. சினிமாகாரர்கள் என்ன விண்ணில் இருந்து இறங்கிவந்த தேவ தூதர்களா? அவர்கள் மனித பிறவிகள் இல்லையா? ஆணும் பெண்ணும் கலவியில் இணைந்து இந்த சினிமா காரர்களை பிள்ளைகளாக பெற்றுஎடுக்க வில்லையா? இவர்கள் எல்லாம் என்ன சுயம்புவா? இவர்கள் சாகா வரம் பெற்றுவந்த சிரஞ்சீவிகளா? ஒரு குறிப்பிட்ட நடிகனின் திரைப்படம் வெளிவர போகிறது என்றால் அதற்கு முன்பாகவே திட்டமிட்டு வித விதமான பரபரப்பு செய்திகளை வெளியிட்டு அந்த நடிகனை உச்சந்தலையில் வைத்து ஆடுவது ஏன்? காசு வரும் என்றால் எதையும் செய்வீர்களா? வடக்கில் ஆங்கில தினசரிகளும், தொலைக்காட்சிகளும் மக்களுக்கு செய்யும் அதே கேடு கெட்ட வியாபார யுக்திகளை அப்...
Channel of Online Newsfeeds and Entertainment