Skip to main content

Posts

Showing posts from April, 2021

PRONING FOR SELF CARE

கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் மக்களின் கனிவான கவனத்திற்கு  குப்புறப் படுத்தலின் நன்மைகள்  PRONING FOR SELF CARE  Dr.A.B.ஃபரூக் அப்துல்லா  பொது நல மருத்துவர்  சிவகங்கை  கொரோனா தொற்றடைந்து வீடுகளில் மருத்துவமனைகளில் இருக்கும் சொந்தங்களே இந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் குப்புறப்படுத்தல் முறையைப் பற்றிப் படித்து பின்பற்ற முயற்சி செய்யுங்கள்  இதை PRONING என்கிறோம்  சாதாரணமாக நாம் முதுகு கீழ்ப்புறம் வயிற்றுப்பகுதி மேற்புறமாகவே படுத்துப்பழகியிருப்போம்.  இதை SUPINE POSITION .மல்லாக்க படுத்தல் என்கிறோம்  கொரோனா பாதித்து நுரையீரலில் தொற்று பரவிக்கொண்டிருக்கும் சூழலில் மல்லாக்கபடுப்பதை விட குப்புறப்படுப்பது நன்றாக உதவும். இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட.  குப்புறப்படுக்கும் போது நமது வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகவும் முதுகுப்பகுதி மேல்ப்புறமாகவும் இருக்கும்.  இதனால் நுரையீரலின் சுவாசம் உட்கொள்ளும் வெளியிடும் தன்மை மேம்படும்.  இதன் மூலம் உடலுக்கு குறைவான சுவாசிக்கும் பளுவில் அதிகம...