நிகழ்பட வலை பதிவுகள் சமீபகாலமாக முக்கிய பங்கு வகித்து கொண்டிருகின்றன. இவை எழுத்து உரையுடன் கூடிய நிகழ்படங்களின் தொகுப்பாகும். இடன் பகுப்பாய்வு பற்றிய ஆராய்ச்சியில் இதை எளிதாகவும்  வெற்றிகரமாகவும்  கையாள்வது என்பது ஒரு சவாலான ஒன்றாகும். முந்தைய அமைப்பில் சொற்பொருள் விளக்கமும்  நிகழ்பட வலை பதிவுகளும் உள்ளடக்கிய நிர்வாக முன்மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. இவை திறவுசொற்களை குறிப்பிட்ட வலைப்பதிவுகளிலிருந்து மட்டுமல்லாமல் புற வளங்களிலிருந்தும் சொற்பொருள் விளக்கம் மூலம் பிரித்தெடுக்கிறது. நிகழ்பட வலைப்பதிவு தேடல் மூலம் வினவுசொர்கள் பிரித்தெடுத்த சொற்களுடன் ஒப்பிடப்பட்டு அதற்கு தகுந்த நிகழ்படங்களை பெறலாம். உருவ தேடல் மூலம் பல படங்களின் இடையே உள்ள ஒப்புமையை அறியலாம். இவை பெறப்பட்ட நேரம், இறுதியாக பார்த்த படங்கள் போல பல கட்டளைகளுக்குட்பட்டு வரிசைபடுத்தப்படுகிறது.
     எங்கள் அமைப்பில் நிகழ்பட உரை விளக்கமும் நிகழ்பட தேடலும் உள்ளடக்கிய ஒரு நவீன மாதிரியை முன்மொழிகிறோம். இயல்பான மொழி செயலாக்க உத்தியை அடிப்படையாக கொண்டு கொடுக்கப்பட்ட உள்ளீடு தகவல்களிலிருந்து திறவுசொற்களை பிரித்தெடுக்க நிகழ்பட உரை விளக்கமானது உதவுகிறது. அதோடு நிகழ்படங்களும் திறவுசொறகள் அடிப்படையில் வரிசைப்படுதப்படுகிறது. இந்த தேடலானது எழுத்து, உருவம் மற்றும் குரல் ஆகிய தனிப்பட்ட தேடல்களை உள்ளடக்கியது. எழுத்து தேடல் பொருத்தல் பொறிநுட்பம் அடிப்படையில் செயல்படுகிறது. உருவ தேடல் மூலம் கொடுக்கப்பட்ட படங்கள் நிகழ்படங்களில் உள்ள உருவங்களுடன் ஒப்பிடப்படுகிறது. குரல் தேடலில் உணரப்பட்ட குரல் எழுத்து வடிவில் மாற்றப்பட்டு பின் ஒப்பிடப்படுகிறது. ஒப்பீடு சதவீத அடிப்படையில் அவை வரிசைப்படுத்தப்படுகிறது.  இந்த அமைப்பு உருவ தேடல் மற்றும் குரல் தேடலில் அதி நுட்பமாக செயல்படுகிறது. இந்த நவீன முறையில் எல்லா வகை வினவலுக்கும் உண்டான மறு அழைப்புக்குண்டான மதிப்பு திறன்படுத்தப்படுகிறது.                      

Comments