ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது..


.
அந்த கடை வாசலில் கடையின்
விதிமுறை போர்டு இருந்தது.
அதில் எழுதியிருந்தது..
.
1.கடைக்கு ஒரு தடவைதான்
வரலாம்.
.
2. கடையில் மொத்தம் 6 தளங்கள்
இருக்கு... ஒவ்வொரு தளத்திலும்
இருக்குற ஆண்களோட தகுதிகள்
மேல போக போக
அதிகமாகிட்டே போகும்.
.
3.ஒரு தளத்துல இருந்து மேல
போயிட்டா மறுபடி கீழ வர
முடியாது..
அப்படியே வெளியேதான் போக
முடியும்..
.
இதெல்லாம்
படிச்சுட்டு ஒரு இளம்பெண்
கணவர் வாங்க கடைக்கு வந்தார்..
.
"பச்..கணவர் வாங்குறது என்ன
காய்கறி வாங்குற
மாதிரி கஷ்டமா என்ன...
ச்சேச்சே அப்படி எல்லாம்
இருக்காது"
.
முதல் தளம் அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
.
இது அடிப்படை தகுதின்னு நினைச்சுட்டு இன்னும்
மேல போக முடிவு செய்றாங்க..
.
இரண்டாம் தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்
மற்றும் குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள் "
.
இதுவும்
அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இன்னும்
மேல போறாங்க..
.
மூன்றாம் தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்,
குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்
மற்றும் வசீகரமானவர்கள்."
.
அந்த இளம்பெண்
வசீகரமானவர்கள்னு பார்த்ததும்,
"ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள்
இருந்தா மேல போக போக
இன்னும் என்ன எல்லாம்
இருக்குமோ"ன்னு நினைச்சு மேல
போக முடிவெடுத்தார்.
.
நாலாவது தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்,
குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்,
வசீகரமானவர்கள் மற்றும்
வீட்டு வேலைகளில்
மனைவிக்கு உதவி செய்யும்
விருப்பம் உளளவர்கள் "
.
இதை விட வேற என்ன வேணும்...
நல்ல குடும்பம் அமைக்கலாமே?
.
கடவுளே... மேல என்ன
இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்.
அப்படின்னு முடிவு பண்ணிட்டு இன்னும்
மேல போனார்..
.
ஐந்தாவது தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் இருக்கும்
கணவர்கள் வேலை உள்ளவர்கள்;
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்,
குழந்தைகள் மேல்
அன்பு செலுத்துபவர்கள்,
வசீகரமானவர்கள்,
வீட்டு வேலைகளில்
மனைவிக்கு உதவி செய்யும்
விருப்பம் உளளவர்கள், மற்றும்
மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள்
"
.
அவ்ளோ தான்.. அந்த பெண்ணால்
தாங்க முடியல...
சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும்
இன்னொரு தளம் இருக்கே.. அங்க
என்ன இருக்குன்னு பார்க்காம
எப்படி முடிவு எடுக்குறது...
சரி மேல போயி தான்
பார்ப்போம்னு போறாங்க..
.
ஆறாவது தளம்
அறிக்கை பலகையில்,
.
"இந்த தளத்தில் கணவர்கள் யாரும்
இல்லை.. வெளியே செல்லும்
வழி மட்டுமே உள்ளது.. இந்த
தளத்தை அமைத்ததற்கு காரணமே,
பெண்களை திருப்திப்படுத்
தவே முடியாதுங்குறத
நிரூபிக்கத்தான்..!
.
எங்கள்
கடைக்கு வந்தமைக்கு நன்றி...!
.
"பார்த்து கவனமாக
கீழே படிகளில் இறங்கவும் "
அப்படின்னு போட்டிருந்தது..

# வாட்ஸ்ஆப் ல வந்ததுங்கோ

Comments