பீதியை கிளப்ப வேண்டாம். ஆனால்...
-----------------------------------------------------------
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே கடல் பரப்பில் காற்று அழுத்தம் உருவாகி இருக்கிறது. இது நாளை இரண்டாக பிரியும். ஒன்று இலங்கை நோக்கி நகரும். மற்றது தமிழகத்தை நோக்கி வரும்.
தமிழகம் நோக்கி வட மேற்காக நகரும் காற்று அழுத்த மண்டலமும், இலங்கை நோக்கி தென் மேற்காக செல்லும் கா. அ. மண்டலமும் அரை வட்டமிட்டு மீண்டும் ஒன்றாக சேரும். அப்போது அது அநேகமாக சென்னை அருகில் கடலில் நிலை கொள்ளும்.
சுற்றுப் பயணம் செய்ததால் இரு மண்டலங்களின் அழுத்தமும் அதிகமாகி இருக்கும். அப்படி வலுவான ஒருங்கிணைந்த மண்டலம் சென்னை அருகே நிலை கொள்ளும்போது சென்னையிலும் வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் காற்றும் மழையும் பலமாக இருக்கும்.
பின்னர் இது மீண்டும் இரண்டாக பிரிந்து, ஒன்று வடக்கு வட கிழக்கு திசையில் ஆந்திரா ஒடிசா கடலோரத்தை தேடி பயணம் தொடங்கும். ஆனால் இரண்டாவது பிரிவு, அதாவது எஞ்சியுள்ள அழுத்த மண்டலம் எங்கேயும் நகராமல் சென்னையை நோக்கியபடி அப்படியே உட்கார்ந்திருக்கும்.
அந்த அழுத்த மண்டலம் எத்தனை நாள் சென்னை அருகே முகாமிடும் என்பதை உறுதியாக சொல்ல இயலாது. ஆனால், கடந்த வாரம் நடந்ததைவிட கூடுதல் நாட்கள் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரியும்.
இன்னும் எளிமையாக சொல்வது என்றால், அடுத்த வாரம் சென்னை நகரை மறுபடியும் அடித்து துவைத்து புரட்டி எடுக்கப் போகிறது மழை.
அது, ஏற்கனவே பெய்த மழை ஜுஜுபி என்று சொல்லும் அளவுக்கு
இருக்கலாம்.
இது நமது உள்ளூர் மழை கடவுள் ரமணன் தெரிவித்த தகவல் அல்ல. அமெரிக்காவின் க்ளைமேட் ப்ரெடிக்ஷன் சென்டரும் ஐரோப்பாவின் சென்டர் ஃபார் மீடியம் ரேஞ்ச் வெதர் ஃபோர்காஸ்டும் விடுத்த அறிக்கைகள் தரும் எச்சரிக்கை.
எப்போதுதான் ஓயும் என்கிறீர்களா?
டிசம்பர் 6 ஆம் தேதிக்கு பிறகு.
இதை வாசிப்பவர்கள் நல்லெண்ண லிஸ்டில் உள்ளவர்களுக்கு பகிரலாம். முன் எச்சரிக்கை நல்லதுதானே?.
Comments