🎯நம்ம லைஃப்லே டெய்லி ஃபாலோ செய்ய வேண்டிய சில செயல்கள்...!!!👣👣👣
✅1. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.....
✅2. மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.....
✅3. நன்றி, இந்த வார்த்தையை முடிந்தவரை அதிகம் உபயோகி.....
✅4. உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.....
✅5. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து...
✅6. ரகசியங்களைக் காப்பாற்று.....
✅7. புதிய நண்பர்களைத் தேடிக்கொள். பழைய நண்பர்களை மறந்துவிடாதே.....
✅8. தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.....
✅9. உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.....
✅10. தைரியமாக இரு. உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி.....
✅11. ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே.....
✅12. கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.....
✅13. கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.....
✅14. உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்......
✅15.மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்......
✅16. ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.....
✅17. வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர்.....
✅18. போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.....
✅19. ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே. பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை......
✅20. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே......
✅21. பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு......
✅22. எனக்குத் தெரியாது, மன்னிக்கவும், என்பதை தேவையான இடத்தில் சொல்லத் தயங்காதீர்
Comments