LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக்
கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல்
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம்  விட்டுக் கொடுப்போம்…!!!
                   🙏
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புனர்வை ஏற்படுத்துவோம்,
நன்றி !!     🙏

Comments