ஒரு கிராமத்து ஏழை பையனும் அவனோட குடும்பமும் பட்டினம் வந்தாங்களாம். அங்கே ஒரு ஷாப்பிங் மால் கு போனாங்களாம்.
அங்கே அந்த பையன் ஒரு அபூர்வமான விஷயத்த கண்டானாம். உடனே அவன் அப்பா கிட்ட வந்து, "அப்பா அதோ அந்த சுவர் தானாகவே ரெண்டா பிரிஞ்சி தானா முடிகிறது" னு காட்டினானாம்.
முன்ன பின்ன லிப்ட்ட கண்டிராத அப்பனும், "நானும் இப்போ தான் இப்டி ஒன்ன பார்க்குறேன் மகனே" னு வாய பிழந்து பார்த்துகிட்டு இருந்தானாம்.
அந்த நேரம் பார்த்து ஒரு 40 வயது ஆன்டி பட்டன தட்டி லிப்ட திறந்து உள்ள போனாளாம். கதவும் மூடிகிச்சாம். ஆனா இந்த கிராமத்து அப்பாவும் மகனும் வாய மூடாம என்னதான் நடக்குது னு பார்த்துகிட்டே இருந்தங்களாம்.
பக்கத்துல இருந்த போர்ட்ல நம்பர் ஒன்னு ஒன்னா கூடிகிட்டே போச்சாம் 1....2.....3.....4.....5......6.... அப்புறம் திரும்ப ஒன்னு ஒன்னா குறைஞ்சி 1 கே வந்ததும் கதவு திறந்துதாம்.
உள்ள இருந்து ஒரு 24 வயது பெண் - மாடல் அழகி மாதிரி வெளில வந்தாளாம்.
உடனே அந்த அப்பன் பையன் கிட்ட சொன்னானாம் "டேய் மகனே! உடனே போய் உங்கம்மாவ கூட்டி வா!"
Comments