தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மாணவர்களுக்கு சூர்யா அனுப்பிய மெசேஜ் :
அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு… ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார். அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷயம்.
வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000. இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே?
---
நன்றி >
Comments