Skip to main content

நகைச்சுவை 50

1. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.

2. டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.

3. என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.

4. தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

5. நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?

6. கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க...
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...

7. உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

8. டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்....
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..

9. பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..

10. என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...

11. எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!

12. டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

13. ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி
டாக்டர்னு தெரிஞ்சுது…!
எப்படி?
தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே..?

14. கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார் எழுதி வெச்சிருக்கிறாரு?
ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது
பாருங்க, அதான்!

15. நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !இதிலே என்ன இருக்கு ?
எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு !

16. நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...

17. பல்லு எப்படி விழுந்திச்சு ?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!

18. சொந்த ஊர் எது? ....
அந்த அளவுக்கு வசதி இல்லீங்க....
சொந்த வீடுதான் இருக்கு!

19. காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

20. கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ? இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?!

21. உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.

22. டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

23. என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!! உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...

24. ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?.... வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!

25. கோபு-எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
நண்பன் -தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
கோபு-இல்லே.தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா

26. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

27. நோயாளி-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
டாக்டர்-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

28. ராமு : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

29. நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?
நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா, நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!
நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

30. வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.

31. நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்...

32. கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!

33. நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

34. நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

35. நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.

36. ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

37. பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.

38. டாக்டர்-"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ்-"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"

39. வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்

40. வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.

41. தலைவர்-என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது?
தொண்டர்-ஓட்டை அள்ளி வீசுங்க என்பதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..

42. "எங்க வீட்டு நாயைக் காணோம் சார்..." "அடையாளம் சொல்லுங்க..." "அது கோபமா குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"

43. "என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?" "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"

44. நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" "போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.

45. என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.

46. நண்பன்-நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
பெண் அவ்வளவு அழகா?
நண்பன்1-இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..

47. பக்கத்துவீட்டுகாரர்-வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
ராமு-மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.

48. மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . ????

49. பூச்சி night walking போச்சு .
ஒரு பூச்சிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு
பூச்சிக்கு குளிர்ல ,Why?
அது "கம்பளி பூச்சி "
எப்புடி !!! ??????? நாங்கெல்லாம் பூச்சிக்கே காட்சிக் காட்டுவோம்ல.

50. ஒருவன்: டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்: எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

CSE - Technical Publication eBooks (R17) 🧩 ~~~ The below mentioned books are only available to us through Mr. Sai Seena ( @SaiSeena ), if you have any other E-BOOKS for any department kindly share it to us. Thank You ~~~ 🧩  *CSE - SEMESTER I*   *GE8151 - Problem Solving and Python Programming*  https://tinyurl.com/GE8151-TP  *CSE - SEMESTER II*   *HS8251 - Technical English*  https://tinyurl.com/HS8251-TP  *BE8255 - Basic Electrical, Electronics and Measurement Engineering*  https://tinyurl.com/BE8255-TP  *GE8291 - Environmental Science and Engineering*  https://tinyurl.com/GE8291-TP  *CS8251 - Programming in C*  https://tinyurl.com/CS8251-TP  *CSE - SEMESTER III*   *CS8391 - Data Structures*  https://tinyurl.com/CS8391-TP  *CS8392 - Object Oriented Programming*  https://tinyurl.com/CS8392-TP  *EC8395 - Communication Engineering*  https://tinyurl.com/EC8395-TP  *CSE - SEM...

Proposed Logo for LIC

LIC celebrates 67 glorious years. I suggest to modify the circular shape new logo for lic without changing the symbol. I suggest the name LICI ( L ife I nsurance C orporation of I ndia) for Lic. 

Free Ebooks by Technical Publications

1. Elements of Electrical Engineering  2. Electrical and Electronics Engineering  3. Analog and Digital Electronics  4. Electronics Engineering  5. Analog Electronics  6. Microprocessor and Microcontrollers 7. Basic Electrical Engineering  8. Modern Control Theory 9. Basic Electrical Engineering  10. Electrical and Electronics Principles 11. Introductory AC circuit Theory 12. Electrical Technology Click here to download