ராதே கிருஷ்ணா

ராதே கிருஷ்ணா... ராதே கிருஷ்ணா.

நவநீதன்,கோமலவண்ணன்,சுந்தரன் கூறுகின்றான்.

எனக்காக ஒன்றும் பெரியதாக யாகம், யக்னம், கோவில் கோவிலாக சுற்றுவது, குளங்களில் நீராடுவது. ஒற்றைக்கால் தவம், பெரிய பூஜை, -- இதெல்லாம் ஒன்றுமே தேவையில்லை.

வேண்டவே வேண்டாம் . உனக்கு மனது என்று ஒன்றை நீ பிறக்கும் போது காலியாகத்தானே கொடுத்தேன். அதில் முழுமையுமாக என்னை நினை, நிரப்பிக்கொள்.

உண்மையாக நீ அப்படி நினைப்பது தான் ''பக்தி'' . பூரண நம்பிக்கை. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அசைக்க முடியாத அன்பு.

என்னோடு உன்னை இணைத்துக் கொள். கண் திறந்து பார். அடடே, நீ என்னை அடைந்தாயிற்றே.

இந்த பக்தி எப்படி கிடைக்கிறது?
சத் சங்கத்தின் மூலம் தான். கண்டவனோடு சேராதே. அவன் வழியில் உன்னை இழுத்துவிடுவான்.

என் வழியில் உன்னை இழுப்பவனும் இருக்கிறானே. அவனோடு சேர். அவன் தக்க வழி காட்டுவான். உயர்ந்த பாதையில் உன்னைக் கூட்டிசெல்வான். என்னை அடையும் வழி தான் அவனுக்குத் தெரியுமே.

அவனை எப்படிக் கண்டுபிடிப்பது என யோசிக்கிறாயா?

என்னைப்போலவே குணம் உள்ளவன். உன்னருகே இருப்பவன். உனக்கு வேண்டியவன். நீயே தான் அவன். அவனே நான். நல்வழி காட்டுபவன்.

....

Comments