பஞ்ச பட்சி சாஸ்திரம்

பஞ்ச பட்சி சாஸ்திரம்

☆      பஞ்ச பட்சிகள் என்பது வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியனவாகும். இந்த பட்சிகள் ஒவ்வொரு நாளும் தங்களது தொழிலை ஒழுங்காக செய்துவருகின்றன. ஒரு மனிதன் பிறந்த நட்சத்திரத்தை வைத்து, அவனுடைய பட்சி என்ன என்று தீர்மானிக்கப்படுகின்றது.

☆      ஒரு மனிதனது பட்சியானது உண்ணும் தொழிலை செய்து கொண்டிருக்கும் காலத்தில் அவன் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். உறங்கும் தொழிலை செய்யும் பொழுது அவனுடைய முயற்சிகள் தோல்வியில் முடியும். நடை தொழிலை செய்யும் பொழுது அவனுடைய முயற்சி இழுபறியாக இருக்கும்.

வல்லூறு :

☆ அஷ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்களுக்கு வல்லூறு ஆகும். இது வானில் பறக்கும் ஓர் இனப்பறவை. மேலும், இதன் இனமான கருடன் திருமால் வாகனமாகும்.

ஆந்தை :

☆ திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரங்களுக்கு ஆந்தை ஆகும். இந்த பறவையை வடநாட்டில் திருமாலின் இருப்பிடமாக மதித்துப் போற்றுவர்.

காகம் :

☆ உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரங்களுக்கு காகம் ஆகும். இது சனீஸவரனின் வாகனமாக போற்றி வணங்கப்படுகிறது.

கோழி :

☆ அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு கோழி ஆகும். இது முருக பெருமானின் கொடியில் உள்ளது. 'செவப் கொடியோன்" எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானை போற்றி வணங்குகின்றனர்.

மயில் :

☆ திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களுக்கு மயில் ஆகும். இது முருகப் பெருமானின் வாகனமாகும்.

அஸ்வினி நட்சத்திர தோஷம் நீங்க..!

அஸ்வினி நட்சத்திரதில் பிறந்தவர்கள் தங்களின் நட்சத்திரப் பரிகாரவிருட்சமான எட்டிமரத்தை வணங்குவது மிகசிறந்த பரிகாரம் ஆகும். எட்டிமரத்தினை தலவிருட்சமாக கொண்ட திருத்தலங்களில் பரிகாரம் செய்துகொள்வது மிகவும் பலன்தரும்.

Comments