நினைத்தாலே இனிக்கும்!

நினைத்தாலே இனிக்கும்! - 1
""என்னை புருஷோத்தமன் என யார் ஒருவன் நினைக்கிறானோ, அந்த மகானுபாவன் என்னிடம் எல்லா வழிகளிலும் பக்தி செலுத்தியவன் ஆகிறான்,'' என்கிறான். ஆம்.. பகவானிடம் பக்தி செலுத்துபவன், மகாபாரதம், ராமாயணம், பாகவதம் என எல்லாப்புராணங்களையும் அறிந்தவன் போல் ஆகிறான். பகவானை புருஷோத்தமன் என நினைத்தாலே, தெரியாத எல்லாவற்றையும் தெரிந்தவர்கள் ஆகிறோம். ஆக, இப்படி நினைப்பது கஷ்டமான விஷயமா! இந்த நினைவிருந்தாலே நமக்கு முக்தி கிடைத்து விடும். இந்த எளிமையான பக்தி, கரும்பு தின்னகூலி கொடுத்தது போல் இருக்கிறது.
தியானம், பூஜை, நைவேத்யம் செய்வது தான் பக்தி என்றில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். ஒரு பயில்வானும், சில குத்துச்சண்டை வீரர்களுடன் பத்துநாள் போட்டி போட வேண்டும். ஜெயித்தால் கோப்பை என்று அறிவிக்கப்படுகிறது. இதையே, ஒரே நாள் அந்த பத்து வீரர்களின் தலைவருடன் மோதினால் போதும். அவரை ஜெயித்து விட்டால் கோப்பை என்றால், அந்த பயில்வான் எதைத் தேர்ந்தெடுப்பார்? வலிமை குறைந்த பத்து பேர், ஆனால் பத்துநாள். வலிமையான ஒரு நபர்..ஆனால் ஒரே நாள் தான்!
இதுபோல் தினமும் விளக்கேற்றி, நாமசங்கீர்த்தனம் செய்து, உபன்யாசம் கேட்டு என்று பல வழிகளில் பக்தி செலுத்துவதை விட, பகவானை நினைத்துக் கொண்டிரு என்ற ஒரே வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது தானே!  தொடரும்

Comments