சீ, சீ இந்த பழம் புளிக்கும்

🌺🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
சீ, சீ இந்த பழம் புளிக்கும்

🍇🍇எட்டி, எட்டி பறிக்க முயன்று
முடியாதலால் திராட்சை பழம்
புளித்ததென்று சொன்ன கதை

🍇🍇எவருக்கும் பொருந்தும் வாழ்வில்
இந்த கதை

🍇🍇எது கூடுகின்றதோ, எது கிடைக்கின்றதோ
அது உன் வரையில் அமிர்தம்

🍇🍇எது தவிர்க்கின்றதோ உன்னை, எது
கை கூடவில்லையோ, அது விஷம்

🍇🍇இந்த மனநிலை கொண்டு விட்டால்
அனைவருமே, எந்த கவலையும் தான்
அண்டாதே யாரையுமே

🍇🍇உனக்கென்று உள்ளதை யாரும்
தட்டி பறிக்க இயலாது எத்தனை தான்
முயன்றாலுமே, உனக்கென்று இல்லாததை
யாரும் தர முடியாது எத்தனை தான் அவர்
விரும்பினாலும்

🍇🍇இது தான் உண்மை, உண்மைகள் சில
நேரம் கசக்கும், ஆனால் அது தான்
நிலைக்கும்

🍇🍇எட்டி, எட்டி உன் சக்தியை இழக்காதே
எட்டும் வரை பார்த்து, பின் விட்டு விடு
நிம்மதியை தொலைக்காதே
----

Comments