அதிகாலைப் பொழுது....

அதிகாலைப் பொழுது....

சோம்பல் முறித்துக் கொண்டே, பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள தேநீர்க் கோப்பையை வாயில் வைத்து உறிஞ்சுகிறீர்கள்..

முதல் முடக்கு சென்றபின் தான் தெரிகிறது தேநீரில் சர்க்கரை இல்லை என்று....

எழுந்துசென்று சர்க்கரை போடவோ, மனைவி (அ) தாயை அழைக்கவோ சோம்பல்பட்டு அப்படியே குடிக்கத் தொடங்குகிறீர்கள்..

தேநீர் முடியும்போதுதான் அடியில் கரையாத சர்க்கரை உங்கள் கண்களில் படுகிறது!
இதுதான் வாழ்க்கையும்!

நம்மைச் சுற்றியோ நமக்குள்ளோ உள்ள பெறுமதிவாய்ந்தவற்றை தேட முயற்சிக்காமல், சோம்பலுடன் உட்கார்ந்திருக்கிறோம்.

கொஞ்சம் எழுந்து சுற்றிப் பாருங்கள்!
நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஏதோவொன்று உங்களுக்கு மிக
அருகிலேயே மறைந்திருக்கலாம்!

Comments