வட்ட வடிவக் கோயில்கள்===பாகம்=01.
ஒரே இடத்தில் சிவபிரானுக்கு 108 ஆலயங்கள் அமைந்துள்ள வட்ட வடிவக் கோயில்!!!
அம்பிகா கால்னா,பர்தமான் மாவட்டம்,மேற்கு வங்காள மாநிலம்.
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபிரானுக்குப் பஞ்சபூத தலங்கள், சப்தவிடங்கத் தலங்கள் ,ஜோதிர்லிங்கத் தலங்கள், அட்டவீரட்டத் தலங்கள் என சிறப்புப் பெற்றத் தலங்கள் பல உண்டு. இவை அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள ஆலயங்களை ஒன்றாக்கி சொல்பவை. ஆனால் ஒரே இடத்தில் சிவபிரானுக்கு 108 ஆலயங்கள் வட்டவடிவில் அமைந்துள்ளன என்றால் ஆச்சர்யமானது தானே. அது மேற்கு வங்காள மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள அம்பிகா கால்னா.
Comments