மாலை செய்தி 23-5-2016

♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈🙏🌴🌴23-5-2016🌴🌴🙏📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴தமிழக முதல்வராக மாண்புமிகு ஜெயலலிதா பதவி ஏற்பு

♈🇮🇳🌴முதல்வராக பொறுப்பேற்றதும் இன்று ஜெ., நேரடியாக தலைமை செயலகம் சென்றதும் முதன் முதலாக 5 கோப்புகளில் கையொப்பமிட்டார். அதாவது தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளின் படி ஜெ., கையொப்பமிட்ட விவரம் வருமாறு:
* தொடக்க பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றண்டி
* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் இல்லை
* டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு மேல்தான் திறக்கப்படும். இரவு 10 மணி வரை செயல்படும். 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும்.

* தாலிக்கு 8 கிராம் தங்கம்
* விவசாயி பயிர்க்கடன் தள்ளுபடி
* கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்
* விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம்.

♈🇮🇳🌴பெற்றோர்கள் சம்மதத்துடன் இளம் நடிகருடன் விரைவில் திருமணம் நடிகை சமந்தா பரபரப்பு பேட்டி

♈🇮🇳🌴உலகின் பெரிய காப்பீடு நிறுவனமான ஆக்ஸா, புகையிலை சம்பந்தமான அனைத்து முதலீடுகளையும் தான் விற்கப் போவதாக கூறியுள்ளது.

♈🇮🇳🌴ஈரானுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவோம்: நரேந்திர மோடி

♈🇮🇳🌴மேச்சேரி:ஓய்வு பெற்ற அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் தன், 101வது பிறந்த நாளை, நேற்று கொண்டாடினார். இதில், அவரது நான்கு தலைமுறை உறவினர்கள் பங்கேற்றனர்.
சேலம்

♈🇮🇳🌴அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சார் பதிவாளர் அலுவலகங் களில் பத்திரப்பதிவை எளிமைப்படுத்த, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய திட்டம், விரைவில் அமலுக்கு வர உள்ளது.

♈🇮🇳🌴சல்மான் - கரண் தயாரிப்பில் ஜாக்குலின்

♈🇮🇳🌴மேக்-அப் இல்லாமல் நடிக்கும் ராகிணி திவிவேதி

♈🇮🇳🌴ஜூன் 10ல் த்ரிஷா இரண்டு வேடங்களில் நடித்து வரும் பேய் படமான 'நாயகி' தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. இதனை கோவி இயக்குகிறார். த்ரிஷாவின் மேலாளர் கிரிதர் தனது நண்பர் பத்மராஜாவுடன் இணைந்து தயாரிக்கிறார். 
இதில் த்ரிஷா 80களில் வாழ்ந்த ஒரு பிரபல நடிகையாகவும், இன்றைய சராசரி பெண்ணாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். 

♈🇮🇳🌴மேக்-அப் இல்லாமல் நடிக்கும் ராகிணி திவிவேதி

♈🇮🇳🌴மீண்டும் கன்னட படத்தில் ஜெகபதி பாபு

♈🇮🇳🌴அறிவிக்கப்படாத மின்தடைக்கு நுகர்வோர்களுக்கு இழப்பீடு : அரவிந்த் கெஜ்ரிவால்

♈🇮🇳🌴மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.- சென்னையில் வெங்கையா நாயுடு பேட்டி

♈🇮🇳🌴அதிகரித்து வரும் வெயில் தாக்கம் குஜராத்தில் உருகி ஓடும் தார்சாலைகள்

ராஜஸ்தான் மாநிலம் பலோடியல் நாட்டில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. 

இதனிடையே சாலைகள் பலவும் வெப்பத்தின் தாக்கத்தால் உருகி பொதுமக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலியில் அமைந்துள்ள சில்வாச சாலையில் தார் உருகி வழிந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிப்பட்டுள்ளனர்.

சில்வாச பகுதியில் மட்டுமின்றி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலும் இதுபோன்று அதிக வெப்பத்தின் காரணமாக தார் சாலைகள் உருகி வழிந்துள்ளது. இப்பகுதி சில்வசா பகுதிக்கு 50 கிலோ மீட்டர் வட திசையில் அமைந்துள்ளது.

♈🇮🇳🌴ஹைதராபாத் சிங்கத்திற்கு கைகொடுக்க முயன்று மாட்டி கொண்டவர்

♈🇮🇳🌴மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம்: குடியரசுத் தலைவர் பிரணாப்புடன் நட்டா சந்திப்பு

♈🇮🇳🌴: +2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 22-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.பள்ளிகள், தேர்வு மையங்களில் நாளை முதல் மே 27-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மேலும் தனியார் கணினி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. 

♈🇮🇳🌴முதல்வர் ஜெ.,வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  

♈🇮🇳🌴ஜெ., பதவியேற்பு: மத்திய அமைச்சர்கள் வெங்கையா, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு  

♈🇮🇳🌴விமானிகள் ஜெய்ஹிந்த் எனக்கூற அறிவுரை  

♈🇮🇳🌴கொச்சி விமான படை தளத்தில் வீரர் மர்ம மரணம்

♈🇮🇳🌴ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி  

♈🇮🇳🌴 உத்திரபிரதேசத்தில் கிராம மக்கள் வைத்த பொறியில் சிக்கிய சிறுத்தை  

♈🇮🇳🌴 இந்தியா-ஈரான் தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது 

♈🇮🇳🌴பிபிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கபபட்ட அனுராக் தாகூருக்கு டெல்லியில் வரவேற்பு 

♈🇮🇳🌴 முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் தா.பாண்டியன் பங்கேற்பு 

♈🇮🇳🌴பிரோசாபாத்தில் உயர் அழுத்த மின்சார கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் போராட்டம் 

♈🇮🇳🌴 சென்னை கமலாலயத்தில் மாவட்ட தலைவர்களுடன் தமிழிசை ஆலோசனை 

♈🇮🇳🌴தீவிரவாதம் பற்றிய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புடன் வெளியிட வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் ரதோர்  கோரிக்கை விடுத்துள்ளார்

♈🇮🇳🌴அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல் ; பாகிஸ்தான் கடும் கண்டனம்

♈🇮🇳🌴தாய்லாந்து: பாங்காங்கில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவிகள் பலி

♈🇮🇳🌴ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க ஸ்டாலின் பங்கேற்பு

♈🇮🇳🌴எல்லைக் காவல் படையில் 561 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

எல்லைக் காவல் படை சுருக்கமாக பி.எஸ்.எப்.  என்று அழைக்கப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவான இதன் தலைமை இயக்குனரகத்தில் இருந்து, 2016-17-ம் ஆண்டுக்கான கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மொத்தம் 561 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக துப்புரவாளர் பணிக்கு 147 இடங்களும், சமையலர் பணிக்கு 140 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர டெய்லர், பெயிண்டர், சலவைப் பணியாளர், காப்லர், பார்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 1-8-2016 தேதியில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் உள்ளிட்டவர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.கல்வித்தகுதி:

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பதுடன், 2 ஆண்டுகள் பணி சார்ந்த அனுபவம் பெற்றவவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓராண்டு ஐ.டி.ஐ. படித்து, ஓராண்டு பணி அனுபவம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் 2 ஆண்டு படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.உடல்தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 167.5 செ.மீ. உயரமும், மார்பளவு 78-83 செ.மீ. அளவிற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.தேர்வு செய்யும் முறை:

உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், திறமைத் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் மாதிரி விண்ணப்பம் கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். புகைப்படங்கள் ஒட்டி, கட்டண சான்று மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான அறிவிப்பு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமானதில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடையும்படி விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு மே 21-27 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. முழுமையான விவரங்களை அந்த இதழிலோ அல்லது   www.bsf.nic.in   என்ற இணையதளத்திலோ பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்

♈🇮🇳🌴கோவா கப்பல்தளத்தில் 231 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இதில் வாய்ப்புகள் உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கட்டும் தளங்கள் பல்வேறு இடங்களில் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்று கோவா ஷிப்யார்டு கப்பல்தளம். இங்கு கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல் பணிகள் நடைபெறும். தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் சூப்பிரவைசர், அசிஸ்டன்ட் சூப்பிரன்டென்ட் (எச்.ஆர்.), ஜூனியர் இன்ஸ்ட்ரக்டர் மற்றும் டிப்ளமோ டிரெயினி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிட்டர், வெல்டர் உள்ளிட்ட டிப்ளமோ பணிகளுக்கு கணிசமான இடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கனை இனி பார்க்கலாம்...வயது வரம்பு: 

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 30-4-2016 தேதியை அடிப்படையாக கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், பி.பி.ஏ. பட்டப்படிப்புடன், முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பி.எஸ்.டபுள்யு, பி.ஏ. சோசியல் ஒர்க், பி.ஏ. சோசியாலஜி பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு, செய்முறைத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் பணிக்கு அவசியமான தேர்வு முறைகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.கட்டணம் : 

விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 7-6-2016-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து தேவையான சான்றுகள் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த நகல் விண்ணப்பம் 20-6-2016 தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி www.goashipyard.co.in

♈🇮🇳🌴பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 196 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இது பற்றிய விவரம் வருமாறு:-

பாரத் பெட்ரோலிய கழக நிறுவனம் மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். பெட்ரோலிய எண்ணெய் மற்றும் கியாஸ் வளங்களை கண்டறிதல் மற்றும் சுத்திகரித்தல், சந்தைப்படுத்துதல், வினியோகித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் கவனிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு இடங்களில் இதன் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் விற்பனை மையங்கள் செயல்படுகின்றன.

தற்போது இந்த நிறுவனத்தில் ஆபரேட்டர் (பீல்டு) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 196 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 23 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் எஸ்.எஸ்.எல்.சி. அல்லது மேல்நிலைக் கல்வி தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ./ என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் மெக்கானிக்கல், கெமிக்கல் பிளான்ட், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக், இண்ஸ்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ், மெய்ன்டனென்ஸ் மெக்கானிக்,, எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல், மெக்கட்ரானிக்ஸ், அட்டண்ட் ஆபரேட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் படித்து 70 சதவீதத்திற்கு குறையாத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு திறமைத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 6-6-2016-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விவரங்களை  www.bharatpetroleum.com>careers என்ற இணையதளத்தில் பார்க்கலா

♈🇮🇳🌴10மணிக்கு எக்மோரில் கிளம்ப வேண்டிய KPN பேருந்து தற்போது 12.10PM தி.நகர் KPN நிலையத்தில் இன்னும் வரவில்லை.மதுரை செல்லும் KPN பேருந்து.

KPN பேருந்து சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.அவர்களிடம் கேட்டால் மரியாதை யான பதில் இல்லை.

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments