ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும்,

Must Read :ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது.அதில், ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும்" இருந்தது.தம்பதிகள் இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால்யார்?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும்இலவசமாக. வந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டுஇருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.வீட்டை திறந்தவர்களுக்குஒரே அதிர்ச்சி !!!வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம்கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது.அதில்,'' என்னா?? படம் சூப்பரா..என்று எழுதியிருந்தது.அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்ததுஐயோ...!'களவாணிப்பயலா'அவன்....? என்று....நீதி: ''இலவசம்'' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே . உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை....Just think and vote May 16

Comments