நீங்கள் பயன்படுத்திய பிளேடு்.

நீங்கள் பயன்படுத்திய
பிளேடுகளை குப்பைத்தொட்டிகளில் போடாதீர்கள்.
அதை அறியாத விலங்குகள் குப்பைகளூடே கிடக்கும் உணவை உண்ணும் அவசரத்தில் பிளேடை விழுங்கி விடும் வாய்ப்புண்டு.
கோழிகள் குப்பைகளைக் கிளறுவதனால் காயமடைகின்றன.
பிளேடை தவறுதலாக விழுங்கிவிடும் விலங்குகளின் தொண்டையில் பிளேடு மாட்டிக்கொண்டு ஆதரவற்ற அப்பாவி விலங்குகள் சொல்லொணாத்துயரத்திற்கு ஆளாகின்றன. அவை இறுதியில் இறந்தும் விடுகின்றன.
ஒரு ஒரு கிலோ கொள்ளும் பெட்டியில் நீங்கள் பயன்படுத்திய பிளேடுகளைப்போட்டால் அவை ஐந்தாண்டுகள் வரும்.(தனி நபர் கணக்கு)
பின் அப்பிளேடுகளை மூன்றடி ஆழத்தில் தோண்டி புதைத்துவிட்டால் அவை அப்படியே துருப்பிடித்து மக்கிவிடும்.
இப்பதிவை அலட்சியம் செய்யாமல் அதிகம் பகிர்க.
உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்.
எல்லா உயிரும் நம்முயிர் போல என்ற எண்ணம்கொண்டு செயலாற்றி வாழ்ந்தால் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழலாம்.

Comments