மம்தா பானர்ஜி அம்மா...

வாழ்த்துக்கள் மம்தா பானர்ஜி அம்மா...

மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து இந்த முறையும் வென்றுள்ளீர்கள்...

ரப்பர் செருப்பு...
சிம்பிள் புடவை...
2000ஓவா செல்போன்..
200ஓவா வாட்ச்சு...
காரில் செல்வதை விட அதிகம் நடந்து செல்லும் முதல்வர்..
இந்தியாவில் வீரமங்கைகள் இருக்கிறார்கள் என்பதற்கு இவரை போன்றோரே சரியான எடுத்துக்காட்டு..

மம்தா பானர்ஜி, ஒரு சாதாரண பெண்ணாக பிறந்து இந்திய சரித்திரத்தில் இடம்பெறும் அளவுக்கு முன்னேறி உள்ளார்.

இந்தியாவில் அன்னிய ஆதிக்கத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி அகற்றியது மாதிரி,

மேற்குவங்காளத்தில் பிறந்த இந்த பெண்மணி, அரசியலில் உயர்ந்தது மட்டுமல்லாது அந்த மாநிலத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு மாற்று இல்லை என்று கடந்த 30 ஆண்டுகளாக இருந்த நிலையை மாற்றியதோடு ஆட்சிப்பீடத்தில் இருந்தும் அகற்றி பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

மேற்கு வங்க முதல்வர் 45க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

பல ஓவியங்களையும் வரைந்துள்ளார்.

கண்காட்சியில் வைக்கப்படும் இவரது ஓவியங்களை லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து பலர் வாங்கி செல்கின்றனர்.

இதிலிருந்து கிடைக்கும் தொகையை தர்ம காரியங்களுக்கு மம்தா பயன்படுத்தி வருகிறார்.

ஒரு முறை கண்காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்கள் ரூ.1.8 கோடிக்கு விற்பனையானது.

ஓவியத்தை வாங்கியவர் பெயர் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ரூ. 1.8 கோடி கொடுத்து மம்தாவின் ஓவியங்களை வாங்கியவர் பெயரை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பினார்.

ஓவிய விற்பனை வாயிலாக பல்லாயிரம் கோடி மோசடி செய்த சாரதா சிட்பண்டு ஊழலில் மம்தாவுக்கு தொடர்பு இருப்பதாக  மறைமுகமாக அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு மம்தா கொடுத்த பதிலடி...

மத்தியில் இதற்கு முன்பு ரயில்வே அமைச்சராக இருந்தபோதும், தற்போது முதல்வராக இருக்கும் சூழ்நிலையிலும் அரசு கொடுக்கும் சம்பளத்தை கூட நான் வாங்குவதில்லை.

எனக்கு குடும்பம் எதுவும் இல்லை.

நான் மிகவும் நேசித்த எனது தாய் கூட இப்போது உயிருடன் இல்லை.

நான் எழுதிய புத்தகங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்துகிறேன்.

டீ குடிக்க கூட எனது சொந்த காசை செலவழிக்கிறேன்.

அரசு காரை கூட பயன்படுத்தாமல் எனது சொந்த காரையே பயன்படுத்தி வருகிறேன் என்றார்.

முன்னாள் எம்பி என்ற முறையில் பென்ஷனாக வரக்கூடிய மாதம் ரூ. 50 ஆயிரத்தையும் கடந்த 3 ஆண்டாக மம்தா பானர்ஜி வாங்கவில்லை.

ஓவியங்கள் விற்பனை மூலம் கிடைத்த ரூ.1.1 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

நீங்களும் வாழ்த்துங்க
இந்த சிம்ப்பிள் சிம் ஐ...

Comments