திருநீற்றை உடலில் எங்கெல்லாம் பூசலாம் தெரியுமா?
திருநீற்றை வெறுமனே சாம்பல் என்று எண்ணாமல், அது ஒரு மாபெரும் கவசம் என்று நினைவுடன் பயபக்தியுடன் பதினெட்டு இடங்களில் அதற்குரிய வரிசையில் திருநீறு அணிதல் நல்லது எனப்படுகிறது. சைவ சமய நெறியைப் பின்பற்றுபவர்கள் திருநீறு பூசிக் கொள்கிறோமே தவிர, எங்கெல்லாம் பூசிக் கொள்ள வேண்டும்? எப்படி பூசிக் கொள்ள வேண்டும் என்று தெரியாமலிருக்கிறோம்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே என்கிறார் திருமூல நாயனார்.
திருநீற்றை வெறுமனே சாம்பல் என்று எண்ணாமல், அது ஒரு மாபெரும் கவசம் என்று நினைவுடன் பயபக்தியுடன் பதினெட்டு இடங்களில் அதற்குரிய வரிசையில் திருநீறு அணிதல் நல்லது எனப்படுகிறது.
1. சிரசு நடுவில்
2. நெற்றி
3. மார்பு
4. தொப்புளுக்கு சற்று மேலே
5. இடது புஜம்
6. வலது புஜம்
7. இடது கை நடுவில்
8. வலது கை நடுவில்
9. இடது கை மணிக்கட்டு
10. வலது கை மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழே
16. கண்டத்தைச் சுற்றி – கழுத்து முழுவதும் முன்பக்கமும், பின்பக்கமும்
17. இடது காதில் ஒரு பொட்டு
18. வலது காதில் ஒரு பொட்டு.
Comments