ஆரம்பத்தில் இளைஞனாயிருந்தபோது

ஆரம்பத்தில் இளைஞனாயிருந்தபோது
ஏரோப்ளேன் ஓட்டவும்

சிதார் வாசிக்கவும்

உலகை வெல்லவும்

நிலவை விலைபேசவும் ஆசைப்பட்டேன்...
நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு , எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில்
காலை எழுந்தவுடன் சுகமாய் பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்.

வாழ்க்கையே இவ்வகையில் படிப்படியான சமரசங்களால் ஆனது..

இன்றைய தினத்தில்,

என் டாப் 10
கவலைகள் அல்லது தேவைகள் என்னவென்றால்...
முதலிடத்தில் உடல்நலம்,
மனநலம்,
மற்றவருக்கு தொந்தரவு தராமல் இருப்பது,
இன்சொல்,
அனுதாபம்,
நல்லகாபி/டீ ,
நகைச்சுவை உணர்வு,

நான்கு பக்கமாவது படிப்பது எழுதுவது...

இந்தப்பட்டியலில் பணம் இல்லை .  . .

கற்றதும் பெற்றதும்
#சுஜாதா

Comments