மதிப்பெண்களைத் துரத்துகிறது கல்வி...

மதிப்பெண்களைத்
துரத்துகிறது
கல்வி...

ஓடிப்போய் பிடித்தவர்கள்
படித்தவர்களாகிறார்கள்...

தவற விட்டவர்கள்
தற்கொலைக் குள்ளாகிறார்கள்...

மனப்பாடங்களில்
ஞாபகங்கொண்டு...

மனதின் பாடங்களை
மறந்து போகிறார்கள்...

விளையாடப் போவது
அரட்டை அடிப்பது
ஊர் சுற்ற போவது சினிமா பார்ப்பதெல்லாம்
தண்டனைக்குரிய
குற்றங்கள்...

அதிகாலை துவங்கி
இரவு வரையிலும்
சிறப்பு வகுப்புகள்
அதிக மதிப்பெண் எடுக்க
அம்பாளுக்கு தினசரி
நெய்விளக்கு போடும்
அம்மா,
நண்பனின் மகளைவிட
நல்ல மதிப்பெண் எடுக்க
முருகனிடம் போய்
மொட்டை போடும்
அப்பா

மாணவனாக்கும் பயிற்சியில்
வென்று விடுகிறார்கள்...

மனிதனாக்கும் முயற்சியில் தான்
தோற்று விடுகிறார்கள்.

- யாரோ -

Comments