இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஏழு ரூபாய், தமிழ் பேப்பர் ஐந்து ரூபாய்

இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஏழு ரூபாய்,

தமிழ் பேப்பர் ஐந்து ரூபாய்

என்பதைப் பார்த்ததும் தனது குறுகிய புத்தியை செயலாற்றத் துவங்கினாள் ஒரு நங்கை..     
      
இங்கிலீஷ் பேப்பபரின் இடையிடையே தமிழ் பேப்பரை வைத்துக்கட்டி  பேப்பர்காரனுக்குப் போட்டாள் எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடைபோட்டு எடுத்திட்டுப் போப்பா…!                
சரிங்கம்மா, மொத்தம் பத்து கிலோகிட்ட வருது,…                இந்தாங்கம்மா எழுபது ரூபாய் என அவன் கொடுத்து சென்றான்..

ஏதோ …         சாமர்த்தியமாய் சாதித்து விட்டதாக பூரித்துப் போனாள் அந்நங்கை!              
மாலை அதே பேப்பர்காரனைப் பார்த்ததும் கொஞ்சம்
வெலவெலத்துப் போனாள்.

என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா…?                                        பேப்பருக்கு இடையில…!  அவன் பேசப் பேச அந் நங்கைக்கு வியர்த்தது,               .

பேப்பர் நடுவில் இந்த அஞ்சு பவுன் செயின் இருந்தது, பவுன் விற்கிறவிலைக்கு, இப்படியா அலட்சியமா இருக்கிறது|? இந்தாங்கம்மா…!
என எடுத்து நீட்ட…

அவன் தங்கமாகவும்,

தான் கிழிந்த பழைய பேப்பருமாக
மாறி இருந்ததை, அந்நங்கையால் உணர முடிந்தது!!

Comments