யார் பெரியவர்?

யார் பெரியவர்?

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்.

அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.

டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து 'என்னோடு விளையாட வர்றீங்களா? என்று கேட்டாள்.

அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.

மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால் ஸ்டாயிடம், 'நான் போய் வருகிறேன்' என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.

அதைக் கேட்ட டால்ஸ்டாய், உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று' என்றார்.

அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள்.... மேரியுடன் விளையாடினேன் என்று' என்றாள்.

உலகப் புகழ்பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்காக அவர் வெட்கப்பட்டார்.

Comments